மூட்டு வலியா காளிபிளவர் சாப்பிடுங்க..!

download (25)

வயதானவர்களுக்கும், மெனோபாஸை தாண்டிய பெண்களுக்கும் வரும் இந்த மூட்டு வலி இயற்கையானது தான்.  வெகுநாட்களாக அசைந்து அசைந்து வேலை புரிந்து கொண்டிருந்த மூட்டுப்பகுதி தேய்ந்து விடும்.  இந்த தேய்ந்த மூட்டுப்பகுதியில் இடைவெளி ஏற்பட்டு காயங்கள் ஏற்படும் போது வலி எடுக்கும்.

இதற்கு நிறைய மருத்துவங்கள் ஆங்கிலத்தில் பார்க்க வேண்டி வரும்.  உண்மையை சொல்லப்போனால் முடக்கத்தான் தழையை பறித்து பொடியாகவோ அல்லது தோசைமாவுடன் அரைத்து கலந்தோ சாப்பிட்டோமானால் சரியாகிவிடும்.

இந்த வகையில் காளிபிளவர் என்ற காய்கறி மூட்டு வலியை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றது. இந்த காய்கறியில் மெக்னீசியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.  கால்சியம் மிகுந்து உள்ளது. மனித மூளை எப்படி உள்ளதோ அதைப்போல் தான் இந்த காளிபிளவரும் இருக்கின்றது.  இதனால் தான் என்னவோ மூளைவளர்ச்சிக்கு ஏற்றது.  குழந்தைகளுக்கு பெரிதும் உதவுகின்றது. அவர்களின் அறிவு வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றது.

இது செரிமானக் கோளாறுகளை சரிசெய்துவிடுகின்றது.  சரிசெய்வதால் மட்டுமல்ல இந்த காளிபிளவர் இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றது.  கீழ்வாதம், முடக்குவாதம்,  இதயநோய்கள் ஆகியவைகளை சரிசெய்துவிடுகின்றது.

ஆனால் இந்த காளிபிளவர் சாப்பிட்டால் இதில்அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம் கலந்துள்ளதால் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும்.  வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் வாழைத்தண்டை சமைத்து உண்ணவும். சிறுநீரத்தில் தேங்கியுள்ள கற்கள் வெளிவந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.