சிகரெட்டை நிறுத்தி விடுங்கள்…இல்லையேல் பதிலாக இதை பிடியுங்கள்

original_299567_JFnaf_T4uUaF7sk38trb4S853

சிகரெட்டை பற்றி நிறைய பேர் தினமும் பத்திரிக்கை, டிவி, ரேடியோக்களில் ஏன் சிகரெட் பெட்டிகளிலே போட்டிருந்தாலும்.  நம்ம ஆளுங்க கைத்துணையை கூட விட்டு விடுவார்கள் இந்த விரல் துணையை விட மாட்டார்கள்.  விடவேண்டும் என்று தோன்றினாலும் ரெண்டு நாள் அல்லது மூன்று நாள்….அதிகபட்சம் 5 நாட்கள் அவ்ளோதான் தலை வெடித்துவிடும்…..

இந்த சிகரெட்டால் விளையும் தீமைகள் என்னென்ன தெரியுமா?

1. கண்வலி- கண்புரை வந்து வீங்கிப்போதல், கண் மங்கல்.

2. நுரையீரல், சுவாசக்கோளாறு, சுவாசக்குழாயின் விட்டம் குறைந்ததால் வரும், ஆஸ்துமா      மற்றும் இளைப்பு வாங்கல் நோய்.

3. புற்றுநோய், தொண்டை மற்றும் வாயுக்குள் தோன்றும் புற்றுநோய்.

4. இதயநோய்கள், மாரடைப்பு…

5. புகைப்பிடித்தல் நமக்கு மட்டுமல்ல. நம்மை சுற்றியிருக்கும் மனைவி, பிள்ளைகள், மக்கள் ஆகிய அனைவருக்கும் பாதிப்புதான் தரும்.

எவ்வளவு தான் தீமைகளை சொல்வது…சரி சிகரெட்டில் இருந்து வெளியே வருவதற்கான வழி கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த ரெசிபியானது முகர்ந்து பார்க்க ஏற்றது.  நிகோட்டினை விட இது நல்லது.  இயற்கை முறையானது.

இதற்கு தேவையானது:

  • திராட்சை ஃபுரூட் – ஒரு கை
  • ஆரஞ்சு – ஒன்று
  • சீமைச்சாமந்தி டீ – 20 மிலி
  • ஜோஜோபோ ஆயில் – 30 கிராம்
  • ஆலிவ் ஆயில் – 30 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 30
  • கிராம் கற்பூரவள்ளி – 5 கிராம்

செய்முறை:

முதலில் திராட்சை ஃபுரூட் மற்றும் ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் இந்த சாற்றினை ஊற்றி, அத்துடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக சேர்த்து  நன்கு கலக்க வேண்டும். பிறகு அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி அடைத்துக் கொள்ளவும்.

எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகின்றதோ, அப்போது இந்த டப்பாவை திறந்து ஒரு துணியில் ஊற்றி மூக்கில் வைத்து முகர்ந்து பார்க்க வேண்டும்.  இந்த வாயு சிகரெட் பிடித்த திருப்தியையும், சிகரெட் பற்றிய எண்ணத்தையும் கைவிடச்செய்யும்.

சீக்கிரத்தில் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.