விபத்து நடந்த ஆத்திரத்தில் ஆப்பிரிக்க பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய பொதுமக்கள்

bangcar_2723310f

பெங்களூருவில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவியை பொது மக்கள் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூ ருவை அடுத்துள்ள சோழ தேவன ஹள்ளியை சேர்ந்தவர் சஃபானா தாஜ் (35). இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு தனது கணவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந் தார். அப்போது ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்த முகமது அஹாத் இஸ்மாயில் (21) என்ற கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் சஃபானா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முகமது அஹாத் இஸ்மாயில் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்பியோடிய அவரை, இளைஞர்கள் விரட்டி விரட்டி அடித்தனர். அப்போது அங்கு வந்த வேனின் பின்பக்கமாக ஏறி அவர் தப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஆப்பிரிக்க மாணவரின் காரை அடித்து நொறுக்கி, பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். அந்த வழியாக சென்ற அனைத்து ஆப்பிரிக்க மாணவர்கள் மீதும் உள்ளூர் கும்பல் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து, தான்சானியா நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவி அந்த வழியாக சென்றுள்ளார். அங்கிருந்த கும்பல் அவரையும் தாக்கி, ஆடைகளை கிழித்து நிர் வாணமாக்கியது. மண்டை உடைந்த நிலையில் அழுது கொண்டே, வீடுகளின் கதவுகளை தட்டியுள்ளார்.

ஆப்பிரிக்க மாணவியின் நிலைக் கண்டு அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது டீ-ஷர்ட்டை கொடுத் துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும் தாக்கியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர் களும் வேறு சிலரும் பெண்ணுக்கு உதவாமல் வேடிக்கை பார்த்துள் ளனர். ஒரு வழியாக அந்த பெண் அங்கு வந்த அரசு பேருந்தில் தப்பிக்க முயற்சித்த போது உள்ளே இருந்த பயணிகள் அந்த பெண்ணை கீழே தள்ளினர்.

இதனால் நள்ளிரவில் அழுது கொண்டே ஹெசரகட்டா காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித் துள்ளார். ஆனால் காவலர்கள் அவரது புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து மறுநாள் ஆப்பிரிக்க மாணவர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆச்சார்யா கல்லூரி பேராசிரியர்களின் உதவியுடன் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் ஆப்பிரிக்க மாணவர் இஸ்மாயில் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விரிவாக விசாரித்து, 2 நாட் களுக்கு பிறகு நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க காவல் துணை கண் காணிப்பாளர் ஜகதீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் சோழ தேவனஹள்ளி, ஹெசரகட்டா ஆகிய இடங்களில் உள்ள பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான்சானியா மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லியில் உள்ள அந்நாட்டின் துணைத்தூதரகம் கர்நாடக அரசிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது. ஆப்பிரிக்க மாணவர்கள் பெங்களூருவில் கொடூரமாக தாக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.