எல்லையில் பாதுகாப்பு தீவிரம் – கண்டதும் சுட உத்தரவு

images (20)

மேற்கு பகுதியில் உள்ள விமானப்படை தளங்களில் உரிய அனுமதியின்றி பறக்கும் விமானங்கள் மீதும் சட்டவிரோதமாக தென்படும் மற்றும் ஊடுருவ முயல்பவர்களையும் கண்டதும் சுட பாதுகாப்பு படையினருக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

மேற்குப்பகுதியில் உள்ள விமானப்படை தளங்களில் அனுமதியின்றி பறக்கும் விமானங்களையும், ஊடுருவ முயல்பவர்களையும் கண்டதும் சுட பாதுகாப்பு படையினருக்கு இந்திய விமானப்படை அதிரடி உத்தரவிட்டுள்ளது. விமானப்படை தளங்கள் பாதுகாப்பு குறித்து ராணுவ வீரர்களுக்கும் துணை ராணுவ வீரர்களுக்கும் பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் இந்திய விமானப்படை தளத்திற்குள் ஜனவரி 2 ஆம் தேதி புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.