கொழுப்பின் வேலைகள்

cholestral

 

கொலஸ்ட்ராலை அதிகம் பேர் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.  உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் மிகவும் முக்கியமானது.  இரண்டு வகைகள் கொலஸ்ட்ராலில் உள்ளன.  ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்நு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL).  கொலஸ்ட்ரால் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும்.  அது இல்லாவிட்டால் உடல் சரிவர இயங்காது.  நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு பாதுகாப்பை கொடுக்கும்.  கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து பல்வேறு இதய நோய்க்கு வழிவகுக்கும்.  உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் நமக்கு கிடைக்கிறது.  ஒன்று உடல் தானாக உற்பத்தி செய்து கொள்வது.  இரண்டாவது உணவுப் பொருட்களில் இருந்து பெற்றுக் கொள்வது.  கொலஸ்ட்ரால் குறித்த உண்மையான தகவல்களும்….தவறான கருத்துக்களும்….சரி. கொலஸ்ட்ராலின் பணி தான் என்ன,  என்று கேட்கிறீர்களா,  அறிந்து கொள்ள வேண்டுமாயின் தொடர்ந்து படியுங்கள்.

கொலஸ்ட்ராலின் வேலைகள்.

  1. ஹார்மோன் உற்பத்தி

நமது உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு கொலஸ்ட்ரால் பெரிதும் உதவி புரிகிறது.  அதிலும் டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென், கார்டிசோன், அல்டோஸ்டெரோன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற முக்கியமான ஹார்மோன்களை கொலஸ்ட்ரால் தான் உற்பத்தி செய்கிறது.

  1. வைட்டமின் டி.

பற்களின் பலத்திற்கு காரணமாகவும்  எலும்புகளின் வலிமைக்கும் காரணமாக இருக்கிறது வைட்டமின் டி.  வைட்டமின் டி யை சூரிய ஒளியிலிருந்து உடல் உறிஞ்சுவதற்கு கொலஸ்ட்ரால் தான் மிகவும் உதவி செய்கிறது

  1. செரிமானம்.

கல்லீரலில் இருந்து சுரக்கப்படுகின்ற செரிமான திரவமான பித்த நீரை உண்டாக்குவதற்கு கொலஸ்ட்ரால் தான் பயன்படுத்தப்படுகிறது.  இதனால் செரிமானம் இடையூரின்றி சீராக ஆரோக்கியமாக நடைபெறுகிறது.

  1. உயிரணு,

கொலஸ்ட்ரால் உயிரணுக்களின் ஒர் கட்டமைப்பு. கூறுகளாகும்.  இது மென்படலத்திற்கு போதிய ஆதரவைத் தருகிறது.  செல்களுக்கு வேண்டிய பாதுகாப்பை கொடுக்கிறது கொலஸ்ட்ரால்.  செல்கள்/உயிரணுக்கள் பாதிக்கப்படுவது  உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ தான்.  இந்த மாற்றத்தினால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் உற்பத்தி தடைபடுகிறது.  இதனால் உடலின் சீரான செயல்பாடுகளான ஜீரண மண்டலம் பாதிக்கப்படுகிறது.

  1. நோய் எதிர்ப்பு மண்டலம்.

கொலஸ்ட்ரால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒழுங்கான செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது..  கொலஸ்ட்ரால் நோய் எதிர்ப்பு செல்களான தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் செய்கிறது அதே சமயம் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளவும் செய்கிறது.  உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கெட்ட கொலஸ்ட்ரால் உதவி செய்கிறது.  இது நேரடியாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் இணைந்து செயல்பட்டு அதனை முறியடிக்கிறது.  நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் கெட்ட கொலஸ்டரால் மிகவும் குறைவாக இருப்பவர்கள் தான்.  உடலில் உள்ள கொலஸ்ட்ரால் தானாக உற்பத்தி செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி புதுப்பிக்கப்பட வேண்டிய வேலைகளை சரி செய்கிறது.

  1. ஆன்டி-ஆக்ஸிடன்ட்

கொலஸ்ட்ரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயலாற்றுகிறது.  ப்ரீ-ராடிக்கல் களினால் எற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்கிறது.

குறிப்பு. ஆகவே கொலஸ்ட்ராலை தவறாக கருத வேண்டாம்.  கொலஸ்டரால் உடலுக்கு மிகவும் பயன்படக்கூடியது.  எனவே கொலஸ்ட்ரால் உள்ள உணவை  முற்றிலும் குறைத்துவிடாமல் எந்த ஒரு உணவையும் அளவாகவும் சீராகவும் சாப்பிட்டு. உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரி்த்து வாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.