ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை

images (19)
ஆஸ்துமா நோயை குணப்படுத்த எளிதாக முடியும்.  அடிகப்படியான மூச்சு வாங்குதல், மூச்சிரைத்தல் மற்றும் நெஞ்சை கட்டியணைத்தது போல் ஒரு உணர்வு, கூடவே தொடர் இருமல் இருந்தால் இது ஆஸ்துமாவிற்கு அறிகுறிதான்.
ஆஸ்துமாவை விட்டு நீங்க தூதுவளை நமக்கு உதவி செய்யும்.  ஏனெனில் தூதுவளைக்கு நுரையீரலை குணப்படுத்தக்கூடிய தன்மைகள் உள்ளது.  தூதுவளைப் பொடியை தினமும் சாப்பிடலாம்.  ரசத்தில் அரைத்து கலந்து கொதிக்க வைத்து சாப்பிடலாம்.  இப்படி நிறைய வகைகளில் சாப்பிடலாம்.   ஏன் தூதுவளை தோசையாக கூட சாப்பிடலாம்.
ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை :
தூதுவளை – 1 கைப்பிடி
உளுந்து – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
தோசை மாவு – 7 கரண்டி
தூதுவளைக் கீரையை முள் நீக்கி எடுத்து, சிறிது நெய்விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் உளுந்து சீரகம் சேர்த்து விழுதாய் அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும்.
மூச்சிரைப்பினால் கஷ்டப்படுகிற ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த தோசை அற்புதமான மருந்தாகும். வேலை செய்யும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

Leave a Reply

Your email address will not be published.