நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சலை குணப்படுத்த வெங்காயம்

download (23)

வெயில் காலம் வந்து விட்டாலே போதும், வெயில் சம்பந்தமான பிரச்சினைகள் வந்து விடும்.  அதில் இந்த சூடு பிடித்தல் ஒரு பெரிய பிரச்சினை.  அதுவும் இரவு நேரத்தில் தான் இந்த தொந்தரவு வந்து சேர்ந்துவிடுகின்றது. நாள் முழுக்க வெயிலில் அலைவதால் வெயிலால் உடலில் உள்ள நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு உடல் வற்றி விடுகின்றது.  சிறுநீரில் கலந்துள்ள உப்பையும், பொட்டாசியத்தையும் வெளியேற்றும் அளவுக்கு நீர் இல்லாததால் உப்புகள் சிறுநீர்ப்பாதையில் தேங்கி விடுகின்றது.

இதனால் தான் எரிச்சல் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை தீர்க்க வெயில் காலங்களில் அதிகமாக நீர் பருக வேண்டும். ஒரு நாளைக்கு 5 லிட்டருக்கும் அதிகமாக நீர் பருக வேண்டும். வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டால் மூத்திரக்கடுப்பு பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

காலையில் எழுந்தவுடன் மூன்று வெங்காயம் மற்றும் ஒரு சொம்பு நிறைய நீராகாரம் பருகிவிட வேண்டியது தான்.  அன்று நாள் முழுக்க உடலில் நீர்த் தேவைகளை சரிசெய்து கொள்ளும்.
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில்போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.

சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில்சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறுபிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம்கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

Leave a Reply

Your email address will not be published.