புண்ணை ஆற்றும் தேன்…

download (22)

தேன் மருத்துவகுணம் நிறைந்த ஒரு மருந்து என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான்.  தேனில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது.  தேனில் நிறைய மருத்துவங்கள் உள்ளன.  அதில் இந்த தேனை புண்ணில் தடவும் போது புண்கள் ஆறிவிடுகின்றன.

நெடுநாட்களாக ஆறாமல் இருக்கும் காயங்கள் கூட தேன் பட்டால் ஆறிவிடும்.  பாத வெடிப்புகள், பருக்கள், பருக்களை கிள்ளுவதால் உருவாகும் புண்கள் என்று நிறைய விதமான புண்கள் ஆறிவிடுகின்றன.

புண்கள் மட்டுமல்ல உதட்டில் உள்ள வெடிப்புகள் கூட ஆறிவிடுகின்றன.  தீக்காயம் மற்றும் எண்ணெய் பட்டால் வரும் புண்கள் ஆற வெகுநாட்களாக ஆகும்.  தேனை தடவினால் போதும் ஆறிவிடும்.

தேனில் உள்ள வேதிப்பொருட்கள், புண்ணைக் குணப்படுத்துகின்றன.  இது இறந்த செல்களை சரிசெய்கின்றன.  சதை வளருவதற்கான திசுக்களை வளர்க்கின்றன.  சீழ் பிடித்தால் அதையும் நீக்குகின்றன.

வெட்டுப்புண்கள், இருப்பினால் ( துருப்பிடித்த ) உருவான காயங்கள் ஆகியவை ஆறுவதற்கு தேன் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற உள் புண்களையும் தேன் ஆற்றிவிடும்.

தேனை தினமும் பயன்படுத்தி பயன் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.