பாதத்தில் வளரும் சதை ஒரு வைரஸ் தொற்று நோய் – ஆணிக்கூடு

SDC13415-002

சிலருக்கு பாத்தில் ஆணி வளருவது போல சதை வளரும்.  இந்த சதை வலிக்காது.  மெத்தென்று இருக்கும்.  இந்த சதை வளர்ச்சி நமக்கு பெருத்த பிரச்சினையை தரும்.  இது வைரஸ் தொற்றால் வரும் பிரச்சினை.

சதையால் கால் சரியாக ஊன்ற முடியாது.  பாதத்தில் செருப்பு கூட அணிய முடியாது. செருப்பு அணிந்தால் உறுத்தும்.  வலிக்கும். பிளேடால் எவ்வளவு அறுத்து அறுத்து கிடாசினாலும் மீண்டும் மீண்டும் வளரும்.

இந்த நோயை ஆணிக்கூடு என்று அழைப்பர். அடுத்தவரின் செருப்புகள் அணிவதாலும்.  நெடுநாட்களாக குத்திய முள்ளை எடுக்காமல் விடுவதாலும்.   முள் குத்தும் போது இந்த வைரஸ் தொற்றிக் கொள்வதாலும் தான் ஆணிக்கூடு வளருகின்றது.

இதற்கென்று தனி மருந்துகள் எதுவும் கிடையாது.  வளர்ந்த சதையை அறுத்துவிட்டு வெந்நீரில் நன்றாக கழுவிவிட்டு எருக்கம்பாலை தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வைரஸ் தொற்று சரியாகிவிடும்.

இவைகள் சிறிது நாட்களில் தாமாகவே அழிந்துவிடும்.  மிகவும் வலி ஏற்பட்டால் தோல் டாக்டர்களிடம் காட்டுங்கள்

Leave a Reply

Your email address will not be published.