சென்னையில் செல்போன் வெடித்து பார்வை பறிபோன சிறுவர்.

dhanush_002

தற்போது போன்கள் மலிவாக கிடைக்கின்றது. ஆனால் ஆபத்தும் அதிகரித்துவிடுகின்றது. இதனால் விபத்துகள் போனால் நிறைய நடக்கின்றது.  செல்பீயால், பேசிக்கொண்டே போய் விபத்தில் சிக்குவது, சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது. போன்ற பல.

செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்த எட்டியப்பன் (40) வெண்ணிலா (35) தம்பதியரின் மகன் தனுஷ் (9) 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் திகதி வீட்டில் செல்போனை சார்ஜில் போட்டபடியே தனுஷ் போன் பேசியுள்ளான். அப்போது திடீரென செல்போன் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது தனுஷின் முகம், வலது கையில் காயம் ஏற்பட்டிருந்தது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவனுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு தனுஷின் முகம் மற்றும் வலது கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். கண்களில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியதால் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்ததில், அவனது வலது கண் கருவிழி முற்றிலும். சேதமடைந்தும், இடது கண்ணின் முழி கிழிந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் தானமாக கிடைத்த கருவிழியை வலது கண்ணில் பொருத்தியதோடு, இடது கண்ணில் கிழிந்திருந்த இடத்தில் தையல் போட்டு சரிசெய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் செல்போன் வெடித்து சென்னையில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.