மன்னன் மகனானாலும் சிறைச்சாலைக்கு சென்றால் களிதான் உணவு – உணவு உண்ண மறுக்கும் ராஜபக்ஷேவின் மகன்

yositha rajapaksha 7577d

இலங்கையில் நடந்த ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு விதமான முறைகேடுகள், தீங்கொடுமைகள் செய்தனர்.  தற்போது உள்ள மைத்ரி அரசு இதை பரிசீலித்து நிதி மோசடிக்குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் மகன் யோசிதாவை கைது செய்துவிட்டனர்.

கைது செய்யப்பட்ட கைதியாகவே யோஷிதா பார்க்கப்படுகின்றார்.  இவரை சிறையில் அடைத்துவிட்டனர். இவருக்கு சிறை உணவே வழங்கப்படுகின்றது. வீட்டில் இருந்து உணவுகள் தரப்படுவதில்லை.  மேலும் பார்வைக்கு வருபவர்களையும் கழித்துவிட்டனர்.  அதிகமாக யாரையும் காணக்கூட விடவில்லை.

இந்த நிலையில் அரண்மையில் (மாளிகையில்) வாழ்ந்த ராஜ மகனை சிறையில் அடைத்து சிறை உணவு கொடுத்தால் அவருக்கு பிடிக்குமா..? உணவு வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.  இதனால் இப்போது வீட்டில் இருந்து உணவுகள் வழங்கப்படவுள்ளதாம்…… என்ன செய்ய இதெல்லாம் முன்னாடியே யோசித்திருக்க வேண்டாமா யோசிதா…….எல்லாம் அப்பா பார்த்துக்கொள்வார் என்று இருந்துவிட்டீர்களா…..?

Leave a Reply

Your email address will not be published.