ஜிகா வைரஸ்! கர்ப்பிணிப்பெண்கள் எச்சரிக்கை

children-born-with-microcephaly

ஜிகா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், அத்தகைய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது.

டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் குறைந்த அளவு பரவி வந்த இந்த வைரஸின் தாக்கமானது, பிரேசிலில் கடந்த ஆண்டு முதல் வீரியமாகப் பரவியது.

அந்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த வைரஸின் தாக்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. டெங்கு, சிக்குன் குனியா போன்று இதுவும் ஒரு வகையான காய்ச்சலைப் பரப்பும் வைரஸ்களாகும். எனவே, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களில் இதுதொடர்பான விழிப்புணர்வுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஸிகா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்கள், அந்த விவரங்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய வைரஸ் தாக்கமானது இந்தியாவில் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக மத்திய சுகாதாரத் துறை இயக்குநரகம் சார்பில் கூட்டுக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.