தினமும் 8 மணி நேர தூக்கம்

sleepy man

ஒருவருக்கு தினமும் எட்டுமணி நேர தூக்கம் அவசியம் என்று டாக்டர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள்.  அந்த காலத்திலெல்லாம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்ததால் தான், நம் பாட்டி, தாத்தாக்கள் எல்லாம் அதிக நாட்கள் நோயின்றி வாழ்ந்தனர்.  இதற்குக் காரணம் இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கம் தான். தினமும் எட்டுமணி நேர தூக்கத்தை மேற்கொண்டு வந்தால் நாள் முழுவதும் சளைக்காமல் வேலை செய்ய உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.  மறுநாள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடிகிறது.  ஒருக்கால் எட்டு மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால் அவர்களுக்கு பல்வேறு உடல் நல கோளாறுகள் மறுநாளே நன்கு தெரிந்து விடும்.  நிம்மதியான தூக்கம் வேண்டுமா?  அப்ப இரவில் செரிக்காத உணவுகளை தவிர்த்து விடுங்கள்.  முக்கியமாக எட்டு மணி நேரத்திற்கு குறைவாக தூக்கத்தை மேற்கொண்டால் இதய நோய்கள், மாரடைப்பு, எடையில் ஏற்றத்தாழ்வு, சில சமயங்களில் மூளையில் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.  இந்த பிரச்சனைகளுக்கும் தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது  என்றுதானே கேட்கிறீர்கள்.  அப்படியென்றால் தொடர்ந்து படியுங்கள்.

  1. ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஒருவர் அமைதியாக நிம்மதியாக தூங்க வேண்டும்.  அப்படி தூங்கினால் அவர்களுக்கு அடுத்த நாளே ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உணர முடியும்.  நாள் முழுக்க கடுமையாக உழைப்பவர்கள் இரவில் எட்டுமணி தூக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.  இதனால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது.

  1. மூளைக்கு நல்லது

அதிக  நேரம் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினால் மூளையின் செல்கள் சீரான இடைவெளியில் ஓய்வு பெறுகிறது.  இது உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்கிறது.

  1. வாழ்நாள் நீடிக்கும்

உங்களுக்கு ஒன்று தெரியுமா?  தினந்தோறும் எட்டு மணி நேரம் தூங்கினால் வாழ்நாளின் அளவு நீடிக்கும் என்று.!

  1. சீரான உடல் எடையை பராமரிக்கலாம்.

நமது உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் உள்ளது.  இந்த ஹார்மோன் தான் நாம் பசியுடன் இருக்கிறோமா, இல்லையா என்பதை நமக்கு உணர்த்துகிறது.  ஒருவர் சரியாக தூங்காவிட்டால் இந்த ஹார்மோனின் அளவு குறைந்துவிடும்.  மற்றும் அதிகப்படியான பசியையும் தூண்டும்.  இதனால் நிறைய உணவை சாப்பிட வைக்கும்.  மற்றும் உடவை பருமனாக்கி விடும்.  இதுவே நல்ல தூக்கத்தை மேற்கொண்டால் லெப்டின் அளவு சீராக இருக்கும்.

  1. மனஅழுத்தம்

ஒருவர் தினந்தோறும் எட்டுமணி நேரம் தூங்கினால் அவர் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்.  மற்றும் மன அழுத்தத்தினால் மற்ற உறுப்புக்கள் பாதிக்கப்படுவதில் இருந்தும் விடுபடுகிறார்.

  1. செக்ஸ் வாழ்க்கை மேம்படும்

தூக்கமின்மையால் ஒருவர் துன்பப்பட்டால் அவரால் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் செய்ய முடியாது.  ஒருவரின் செக்ஸ் வாழ்க்கையை தூக்கமின்மை பாதிப்படையச் செய்கிறது.  எப்படியென்றால் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிப்படைகிறது.  இதனால் செக்ஸ் வாழ்க்கை தடைபடுகிறது.  எனவே தினந்தோறும் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொண்டு, மனைவியுடன் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்.

  1. புற்று நோயைத் தடுக்கலாம்.

பெண்களுள் ஆறுமணி நேர தூக்கத்தை மேற்கொண்டவர்களுக்கு 62 சதவிகிதம் மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு மிகுதியாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.   புற்று நோயிலிருந்து.நம்மை பாதுகாத்துக்கொள்ள தினமும் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

  1. நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது.

தூக்கம் குறைவாக மேற்கொள்பவர்களைவிட எட்டுமணி நேரம் தூங்குபவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினந்தோறும் எட்டு மணி நேரத் தூக்கத்தை தவறாமல் கண்டிப்பாக மேற்கொண்டு வாருங்கள்.  நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடுங்கள்,

Leave a Reply

Your email address will not be published.