பப்ளிசிட்டிக்காக தேசியக் கொடியை எரித்த இளைஞருக்கு புழல் சிறை

Burning

கொடிக்காத்த குமரன் வாழ்ந்து மறைந்த இந்த திருநாட்டில் தன் சுயவிளம்பரத்திற்காக தேசியக் கொடியை எரிப்பது போல் போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கிலும் ஷேர் செய்து தானாக மாட்டிக்கொண்ட தேசத்துரோகிக்கு புழல் சிறை……

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தேசியக்கொடியை எரிப்பது போல படங்களை சமூகவலை தளங்களில் பரப்பி இருந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் பதுங்கி இருந்த வாலிபர் பிடிபட்டார்.  போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் நாகப்பட்டினம் மாவட்டம் சின்னக்காடு புளிக்கடை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த திலீபன் (வயது 24) என்பதும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.tumblr_inline_nstcj3bSF71txesb1_500

தந்தை பெரியார் கழகத்தில் தீவிர ஈடுபாடு உடைய தனக்கு டி.வி., பத்திரிகை ஆகியவற்றில் தன்னுடைய பெயரும், படமும் வரவேண்டும் என சுயவிளம்பரத்திற்காக தேசியக்கொடியை எரித்ததாக’’ போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து அவர் மீது தேசிய தடுப்பு சட்டம் மற்றும் தேசியக்கொடி அவமதிப்பு போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதுவே இந்த மாதிரி சவூதி அரேபியாவிலோ அல்லது கொரியாவிலோ ஏன் சைனாவில் செய்திருந்தால் கொடூரமான மரணதண்டனை கிடைத்திருக்கும். மேலும் இதைப்பற்றி சமூகவலைதளங்களில் நிறைய பயனர்கள் தங்களின் கோபமான கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.  ”உண்மையில் தேசப்பற்று இல்லாதவன் எவனும்  தாயை மதிக்கத்தெரியாதவனாக மட்டுமே இருப்பான்”. என்றவாறு தங்களது கருத்துகளை பதிவு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.