இளநீர் குடிப்பதில் இவ்வளவு நிபந்தனைகளா…?

584

வெப்பத்தை தணிக்க பயன்படும் இயற்கை பானங்களில் ஒன்றுதான் இளநீர்…. இந்த இளநீரைப்பற்றி இதுவரைக்கும்…நல்ல முறையிலேயே கமென்ட்களை பெற்றிருப்பீர்கள்…உண்மையாகவே இளநீரை பருகினால் நன்மைதான் நமக்கு விளையும்… ஆனால் சில பிரச்சினைகளும் வரும்…..

சிறுநீர் கல்லடைப்பு உள்ளவர்கள், இளநீரை நிறைய பருகினால் துரிதமாக சிறுநீரைப்பெருக்கி வேகமாக வெளியேற்றும்… கல்லடைப்பு சரியாகிவிடும். ஆனால் சாதரணமாக சிறுநீரக கல்லடைப்பு அல்லாதவர்கள் இதை குடித்தால்.  ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.

சர்க்கரை அளவு இளநீரில் கொஞ்சம் தான்.  ஆனால் இதில் கலோரிகள் அதிகம்.. கூடவே கார்போஹைட்ரேட்டும்  அதிகம். இது இரண்டுமே சர்க்கரையை அதிகரிக்கும்.  இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீரை விட்டு தள்ளியே இருக்கவும்.

இரத்த அழுத்தம் ( Blood Pressure ) உள்ளவர்கள் இதனை அதிகமாக பருக வேண்டாம் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இளநீரில் நிறைய வகை உண்டு அதில் செவ்வௌநீர் மிகவும் சத்தானது.  ஆனால் சிலருக்கு இந்த இளநீர் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

இளநீரை ஜலதோஷம் பிடித்தவர்கள் அருந்தினால் இன்னும் அதிக ஜலதோஷத்தை உண்டாக்கும்.  இதனால் இளநீர் நன்மையை தராது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான்.

Leave a Reply

Your email address will not be published.