அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் மறைய…..

images (1)

பலருக்கு குழந்தைகள் பிறக்கும் போதோ… அல்லது வேறு சில காரணங்களுக்காக உடலில் அறுவை சிகிச்சை செய்து பின் தையல் போட்டிருப்பார்கள்….தையல் பிரித்தப்பின் அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் மறையாது…. இது காலப்போக்கில் ஒரு சிலருக்கு மன அழுத்தம் மற்றும் அழகிழப்பை உருவாக்கிவிடும்.

இதைப் போக்க கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்…..

அம்மான் பச்சரிசி செடியை துண்டித்தால் அதில் பால் ஒழுகும்… அந்தப் பாலை எடுத்து வடுக்களின் மீது வைத்து பூசி வர வடுக்கள் மறைந்து காணாமல் போய்விடும்.

எலுமிச்சை சாற்றை நன்றாக ஆறிய புண்ணின் வடுக்களின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதை புண்ணின் வடுக்கள் மீது தடவினால் புண்ணின் வடுக்கள் மறைந்து காணமால் போய்விடும்.

ஓமேகா 3 ( மீன் மாத்திரைகள் ) எடுத்து அதை கட் செய்து அதில் வரும் எண்ணெயை புண்ணின் மீது தடவி வர வடுக்கள் மறைந்து போகும்….

இந்த முறையானது அனைத்து வடுக்களுக்கும் பொருந்தும்….

Leave a Reply

Your email address will not be published.