பாலியல் பலாத்காரம் ஆன சிறுமிக்கு மீண்டும் நடந்த பாலியல் கொடுமை

112934
ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்திலுள்ள பர்சுதி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை கைது செய்து சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்யவும், சிகிச்சையளிப்பதற்காகவும் ஜாம்ஷெட்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை மருத்துவமனையின் காவலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள காவலாளியை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.