மனஅழுத்தத்தால் உருவாகும் பிரச்னைகள்

Hopeless looking young business woman isolated on white background

 

இன்றைய பதட்டம் நிறைந்த பரபரப்பான உலகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனை மன அழுத்தம ஆகும்.  மன அழுத்தம் ஒருவரின் உடல்  மற்றும் மனநிலையை மெதுவாக மற்றும் திட்டவட்டமாக வீழ்ச்சி அடையச் செய்யும்.  இது தொடக்கத்திலேயே வெளியே தெரிவது இல்லை.  இதுதான் சிக்கல்.  உங்களுடைய பழைய ஆடைகள் பற்றாமல் போகலாம்.  ஆனாலும் அதைப் போட்டுக் கொண்டே மாடிப்படி கூட ஏற முடியாமல் போகலாம்.  மன அழுத்தம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பது புதிய கருத்தல்ல.  உடல் எடையை கட்டுப்படுத்த இயலாத காரணங்களில் மனஅழுத்தமும் ஒன்று.  மன அழுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளானீர்களா என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் எப்படி உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது

  1. அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வது.

ஒருவர் அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவர்கள் சாப்பிடும் உணவின் கலோரியை அளவிட முடியாது.  இப்படி நேரடியாக அதிக கலோரியை எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது.

  1. உணவைத் தவிர்ப்பது.

மூன்று வேளை உணவு என்பது எல்லோருக்கும் அவசியமானது.  அதுதான் உடலை நன்கு இயங்கச் செய்கிறது.  ஒருவர் மன அழுத்தத்துடன் இருக்கும் பொழுது இந்த உணவு முறை பாதிக்கப்படுகிறது.  காலையில் சாப்பிடாமல் அடுத்து மதிய வேளையில் அதிகமான சாப்பாடு எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் எடை அதிகரிக்கிறது.

  1. உணவு வாஞ்சை

மன அழுத்தத்துடன் தொடர்புடையது உணவு வாஞ்சை.  மன அழுத்தம் உள்ளவர்கள் அலுப்பு, சலிப்பு மற்றும் விரக்தி காரணமாக டிபன் சாப்பிடுவார்கள்.  இதனால் எவ்வளவு கலோரி ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.  இதன் விளைவு உடல் எடை அதிகரிப்பதாகும்.

  1. தூக்கமின்மை

மூளையுடன் தொடர்புடையது.  மன அழுத்தம் அதிகம் யோசனை செய்பவர்களுக்கு பயோ மெட்ரிக் சுழற்சி ஏற்படுகிறது.  இது தூக்கத்தை கெடுக்கிறது.  தூக்கமின்மை உடல் வாஞ்சையை ஏற்படுத்துகிறது.  உடலில் உள்ள காடிசோல் நிலைகளை எழுச்சி அடையச் செய்கிறது.  உடல் எடைக்கு வழிவகுக்கிறது.

  1. காஃபைன், சிகரெட் மற்றும் மது

மன அழுத்தத்தின் போது எடுத்துக் கொள்ளப்படும் காப்ஃபைன், சிகரெட், மது போன்றவை உடலில் கார்டிசோல் நிலைகளை அதிகரிக்கச் செய்கிறது.  இது நம் உடலில் கொழுப்பாக சேர்வதால், நம் உடலில் கலோரியை எரிக்க முடியாமல் போகிறது.

  1. மன அழுத்த ஹார்மோன்கள் வெளியீடு.

ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது நம் அட்ரினல் சுரப்பி வெளியிடும் ஹார்மோன் கார்டிசோல் ஆகும்.  இது குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.  வளர்சிதை மாற்றத்திற்கு அதிக ஆற்றலை தருகிறது.  அதே சமயம் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.

  1. உள்ளுறுப்பு கொழுப்பு அதிகரிப்பு

மன அழுத்தம் கொண்டிருப்பவர்களுக்கு உள்ளுறுப்பு கொழுப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  உள்ளுறுப்பு கொழுப்பு அடிவயிற்றில் சேமிக்கப்படுகிறது.  இதய நோய்கள், சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உள்ளுறுப்பு கொழுப்பு.  ஒரு ஆரோக்கிய நபரின் இயல்பான கொழுப்பு ஒன்று முதல் பத்துக்குள் இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.