சென்னை இரயிலின் முன்பு எடுத்த செல்பீ விபரீதமானது…….

download (20)

சென்னை வண்டலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்று வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர், அதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “தினேஷ் குமார். 11 வகுப்பு மாணவர். இவர் தனது நண்பருடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வண்டலூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவர் தண்டவாளத்தில் நின்று கொண்டு வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அதே மின்சார ரயில் அவர் மீது பலமாக மோதிச் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

அண்மையில், மும்பையில் அரபிக்கடலோரம் நின்று செல்ஃபி எடுத்த இளம் பெண்ணும் அவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞரும் கடலில் மூழ்கி பலியாகினர். தொடர்ந்து செல்ஃபி எடுக்கும் போது பலியாகும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அதிகமாக செல்ஃபி எடுத்துக் கொள்பவர்களுக்கு செல்ஃபிடிஸ்  என்ற நோய் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.