பழ. கருப்பையாவுக்கு கிராக்கி அதிகமாயிற்று

download (15)

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த பழ.கருப்பையா, அ.தி.மு.க., அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அவர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உடன், தன் எம்.எல்.ஏ., பதவியை, பழ.கருப்பையா ராஜினாமா செய்தார். இதன்பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், பழ.கருப்பையாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்கியதோடு, அவரது கார் கண்ணாடியையும் உடைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  மக்கள் நலக் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், அவரை நேரில் சந்தித்தும் விசாரித்தனர். இந்நிலையில், தி.மு.க., மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன், பழ.கருப்பையா வீட்டிற்கு சென்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சார்பில் ஆறுதல் கூறினார். அப்போது, ‘தி.மு.க.,வில் பழ.கருப்பையா இணைய வேண்டும்’ என, ஸ்டாலின் விரும்புவதாக கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பழ.கருப்பையா பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுப்பிரமணியன் கூறியதை கேட்ட பழ.கருப்பையா, தன் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து பதிலளிப்பதாக
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.