சிறுநீரும் டெட்டாலும் ஒன்றுதான் – லல்லு பேச்சு

images (17)

டெட்டாலைப் போல சிறுநீரும் கிருமி நாசினிதான். அவசர காலங்களில் டெட்டலாலைப் போல சிறுநீரைப் பயன்படுத்தலாம் என்று லாலு பிரசாத் கூறியுள்ளார். பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் பேசிய, லாலு பிரசாத் யாதவ், மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி முறையில் அனைத்து நோய்களையுமே குணப்படுத்த முடியும். இதில் எந்த பக்கவிளைவும் கிடையாது. ஆனால், ஆங்கில முறையில் எதற்கெடுத்தலும் அறுவை சிகிச்சைதான்.

முன்று நாம் சிறுவர்களாக இருந்த போது உடலில் ஏதேனும் காயம் பட்டால் அதன் மீது சிறுநீர் விடுவோம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு அது புண்ணாகாமல் தடுத்தது. ஆனால், தற்போதோ நாம் டெட்டாலைத்தான் பயன்படுத்துகிறோம். அதைக் கொண்டு கை கழுவுகிறோம். இதுதான் தற்போதைய முன்னேற்றம். ஆனால், அவசர காலங்களில் கிருமி நாசினியாக சிறுநீரைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் லாலுவின் மகன் தேஜபிரதாப் பங்கேற்க வேண்டிய விழாவில், அவருக்கு பதிலாக லாலு பங்கேற்று பேசியதுதான் மேற்கண்ட பேச்சு என்பது குறிப்பிடவேண்டிய விசயம்.

Leave a Reply

Your email address will not be published.