என்னது…..ராஜபக்சே இறந்து விட்டாரா?

1454244997-1617

ராஜபக்‌ஷே அதிபராக இருந்த போது சிஎஸ்என் தொலைக்காட்சிக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டதில் மோசடி புகார் எழுந்ததையடுத்து நேற்று ராஜபக்‌ஷேயின் மகன் யோஷிதா ராஜபக்‌ஷே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜபக்‌ஷேயின் மகன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் ராஜபக்‌ஷே மரணமடைந்தது போல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஒரு முறையும் ராஜபக்‌ஷே திடீரென மரணமடைந்தார் எனவும், அவரது இறுதி சடங்கு சென்னையில் நடைபெறும் எனவும், அவரது புகைப்படங்கள் பரப்பப்பட்டது.

முன்னாள் இலங்கை அதிபர், ராஜபக் ஷேவை இப்படி கேவலமாக இறந்துவிட்டார் என்று சித்தரித்து சமூக வளைதளங்களில் பரப்பபப்படுவது குறித்து இலங்கையில் உள்ள சிங்களர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.