சிறுநீரகத்தில் கல் வந்து விட்டதா?

download (14)

சிறுநீரகப்பிரச்சினை முதியவர்களுக்கு மட்டுமல்ல, மூன்று வயது குழந்தைகளுக்கு கூட வருகின்றது.  முதுகு வலிக்கின்றது என்று மருத்துவமனைக்கு சென்றால் உடனே சிறுநீரகத்தில் கல் என்று கூறிவிடுகின்றார்கள்.  மேலும் கல்லை கரைக்கவில்லையென்றால் உடனே Failure ஆகிவிடும் என்று கூறி பயமுறுத்தியும் விடுகின்றார்கள்.

இந்த சிறுநீர்ப்பிரச்சினை ஏன் வருகின்றது? எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாம்…..: 

குடிக்கும் தண்ணீரில் தான் முதலில் இந்தப்பிரச்சினை ஆரம்பமாகின்றது.  குடிக்கும் தண்ணீரில் அதிகமாக சுண்ணாம்பு ( கால்சியம் ) இருந்தாலே போதும்.  அதிகப்படியான உப்பு உருவாகி சிறுநீரகத்தில் படிந்து நாளடைவில் கல்லாய் மாறிவிடுகின்றது.  பின் இந்தக் கல் சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது.

இதனால் சிறுநீர் கழிக்க முடியமால் முதுகு வலியுடன் கூடிய எரிச்சலை தந்துவிடும்.  இப்படியே போனால் சிறுநீர்க்கல் பெரிதாகி சிறுநீரகத்தை நாளடைவில் செயலிழக்கச்செய்துவிடும்….

கால்சியம் அதிகமான உணவுப்பொருட்களை சாப்பிடும்போதும் வந்து கல் வந்துவிடுகின்றது.  கால்சியம் நிறைந்து உணவுகளான தக்காளி (விதை), உப்பு நிறைந்த உணவுகளான ஊறுகாய் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரகத்தில் கல் உருவாகின்றது.  முக்கிய காரணமாக கள், சாராயம், பீர் போன்றவை கல்லை உருவாக்க காரணமாகின்றது.

எந்தெந்த உணவுகளில் உப்பும், கால்சியமும் கலந்துள்ளதோ அந்த உணவுகள் அனைத்தும், நமக்கு எதிரிதான்.  இது சிறுநீரகத்தை எளிதாக பாதித்துவிடும்…..

அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கல் ஏற்படுகின்றது என்பதற்கு நாம் சிறுநீர் கழிக்கப்போகும் முன்பு எரிச்சல், அடிக்கடி சூடுபிடித்தல் போன்றவைதான்.  இந்த மாதிரி உடலில் உபாதைகள் தோன்றும் போது நாம் அதை சரிசெய்துகொள்ள வேண்டும்.  நாம் சிறுநீரகத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.  இப்போது உப்பு தேங்க ஆரம்பித்துள்ளது.

மேலும் கடுமையான பின் முதுகு வலி, சிறுநீர் கழிக்கும் போது திடீரென்று நின்று விடுதல், மேலும் கொடிய வலி பிறப்புறுப்பில், தாங்க முடியாத இடுப்பு வலி போன்றவை கல் உருவாகிவிட்டது என்பதை தெளிவாக காட்டுகின்றது.

தீர்க்க வழிகள்

சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்க முதலாம் அறிகுறி தென்பட்ட உடனேயே…வெந்நீரை சுட வைத்து நன்றாக குடிக்க வேண்டும். அதிக சிறுநீர் பெருகி வரும். வாரம் இரு முறை வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட வேண்டும்.

சுரைக்காய் மிகவும் முக்கியமானது.  இது சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்துவிடும்… வெள்ளரிக்காய், முள்ளங்கி போன்றவைகளும் தான்.

அடிக்கடி தக்காளியில் செய்த உணவுப்பொருட்கள், காலிபிளவர், நெல்லிக்காய் போன்றவைகள் சாப்பிடும்போது அடுத்த நாள் அல்லது அதனுடன் வாழைத்தண்டையும் சமைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது சாதரணமாகவே கற்கள் கரைந்து வெளியே வந்துவிடும்.

கால்சியம் நிறைந்த உப்புத்தண்ணீரை வெறுத்து ஒதுக்கிவிடுங்கள். குறைந்தபட்சம் கொதிக்க வைத்து அருந்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published.