தெருநாய்கள் சூழ்ந்து சிறுமியை கடித்து பரிதாபமாக கொன்றது….!

images (14)

ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டம் காஞ்சிகச்சேர்லா மண்டலத்தில் உள்ள வெமுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் வெங்கேஷ்வரலு – வெங்கட்ரமணா. இவர்களுக்கு 5 வயதில் மகனும், 3 வயதில்அனன்யா என்ற மகளும் உள்ளனர்.

வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அனன்யா திடீரென மாயமானாள். பெற்றோர்கள் பல மணி நேரம் தேடினார்கள். இறுதியில் வயல்வெளியில் சிறுமி அனன்யா பிணமாக கிடந்தாள். அவள் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் இருந்தது.

விசாரணையில் அனன்யாவை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்றது தெரிய வந்தது. விளையாடிக் கொண்டு இருந்த அனனியாவை பார்த்து தெருநாய் ஒன்று குரைத்தது. அந்த நாய் மீது அனனியா கல் வீசினாள். உடனே அவளை நாய் துரத்தியது. அவள் பயந்து ஓட அவளை பல தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து துரத்தியது. இறுதியில் வயல்வெளியில் சிறுமி தவறி விழுந்தார். தெருநாய்கள் சிறுமியை சூழ்ந்து கடித்து கதறி கொன்றது.

சிறுமியின் குரல்வளை குதறப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் நாயின் பற்கள் பதிந்து இருந்தது. அதிக ரத்தம் வெளியேறி சிறுமி பரிதாபமாக இறந்து உள்ளார்.

நாய் விரட்டியதை ஒரு குழந்தை பார்த்து கூறியதால் அவளது பிணத்தை பெற்றோர்கள் கண்டு பிடித்தனர். மகளின் பிணத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.