ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு பிப் 23 க்கு தள்ளிவைப்பு

images (13)
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல் அமைச்சர்  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த  மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட  உச்ச நீதிமன்றம், விசாரிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை  எழுத்து வடிவில் தொகுப்பாக தாக்கல் செய்யுமாறு வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பு, கர்நாடகா, அன்பழகன் உள்ளிடோர் தரப்பு அண்மையில் ஆவணங்களை தாக்கல் செய்தது.
இதையடுத்து, ஏற்கனவே நீதிபதிகள் கூறியபடி இந்த வழக்கு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், விசாரணையை ஒத்திவைக்க கோரி ஜெயலலிதா தரப்பு அவகாசம் கேட்டதால் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.