3டி பிாிண்ட் வந்தாச்சு

3d printer

அறிவியல் இன்று எங்கே போய் கொண்டிருக்கிறது.  மனிதர்களின் இயற்கை வாழ்க்கையையும், இயல்பு வாழ்க்கையையும் அழிக்கப்போகிறது என்று கூட மிக பெருமையாகவும்,, கவுரவமாகவும் சொல்லிக் கொள்ளலாம்.  காகிதங்களை நகல் எடுத்து எழுத கடினம் என்பதால் தான் XEROX மெஷின், பிரிண்டர் போன்றவைகளை பயன்படுத்தி வந்தோம்.  ஆனால் இன்று அதற்கு மேல் சென்று விவசாயம் செய்ய சோம்பேறித்தனமாக இருப்பதால், அதையும் 3டி-யில் பிரிண்ட் எடுத்து அப்படியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள் மக்கள்..  ஏற்கனவே விவசாயம் செய்ய நிலம் இல்லை.  விவசாயியும் இல்லை.  மக்கள், முன்னேறுவார்கள் என்று பார்த்தால் குழி தோண்டி புதைக்க அறிவியல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  இனி 3-டி உணவு உற்பத்தி பற்றி காண்போம்.

 1. உணவு உற்பத்தியில் புரட்சி.

3டி பிரிண்டரை பயன்படுத்தி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது உணவுப் பொருள் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்றே சொல்லலாம்.  ஆனால் வேளாண்மையில் பாதிப்பு ஏற்படும் என்பதும் உண்மை.

 1. 10 வருடங்களுக்குள்.

இனி வருங்காலத்தில் அதாவது 10-20 ஆண்டுக்குள் 3டி பிரிண்டர் முறையில் அதாவது 10-20 ஆண்டுக்குள் 3டி பிரிண்டர் முறையில் உணவுப் பொருட்களை தயாரிக்க தொடங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 1. இராணுவத்திற்கு பயனளிக்கும்.

இந்த 3டி உணவு உற்பத்தி முறை இராணுவத்திற்கு மிகுந்த உபயோகமளிக்கும் என்று கருதப்படுகிறது.  போர் நடக்கும் இடங்களில் உணவு தயாரிப்பதும் அதனை பரிமாறுவதும் மிகவும் கடினம்.  இது வீரர்களை பாதிக்கும்.  ஆகவே 3டி பிரிண்டர் உணவு உற்பத்தி தொடங்கினால் இதற்கு ஒரு தீர்வு காண முடியும் என்று உலக நாடுகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

 1. ஐ.எப்.டி. 15 சிம்போசியம்

சிகாகோவில் உணவு தொழில் நுட்ப நிறுவனம் (Institute of Food Technology) நடத்திய உலக ஐ.எப்.டி. 15 சிம்போசியத்தில் 3டி பிரிண்டர் மூலம் வரும் காலத்தில் உணவுப் பொருள் உற்பத்தி செய்வதைப் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 1. 3டி பிரிண்டர் விலை.

3டி பிரிண்டர்களின் விலை 1980இல் 5 இலட்சம் டாலர்கள்.  இப்போது இதன் விலை ஆயிரம் டாலர்கள் தான்.  விலை மிகவும் குறைந்து விட்டது..   இப்பொழுது இது சிறிய வடிவிலும் வீட்டிலேயே பயன்படுத்தும் அளவிற்கும் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 1. இன்னும் தயாரிக்கப்படவில்லை.

3டி பிரிண்டிங் தயாரிப்பில் இருப்பவர்கள் எவரும் இதுவரையில் உணவுப் பொருள் உற்பத்தியில் இறங்கவில்லை..  ஆனால் வருங் காலத்தில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளார்கள்..  இதனால் அதிவேகமாக உணவு தயாரி்க்க முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள்  .இத் தயாரிப்பினால் அதிகம் பேர் பலனடைவார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 1. நிபுணர் கருத்து

” நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் உங்கள் துறையினுள் 3டி பிரிண்டரின் நுழைதல் எதிர்காலத்தில் இருக்கும் ”.  என்று லிப்சன் கூறுகிறார்.  இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார்.

 1. 2025-2030 .

அமெரிக்க இராணுவத்தில் 2025 லிருந்து 2030 க்குள் 3டி பிரிண்டிங் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறுகிறார்கள்.  மேலும் இந்த 3டி பிரிண்டிங் உணவு தயாரிப்பு சுவையாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

 1. பணம் செழிக்கும் கருவி.

வருங்காலத்தில் 3டி பிரிண்டிங் உணவு தயாரித்தல் கருவி பண மழை பொழியும் கருவியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  இந்த கருவியை வைத்து நிறைய இலாபம் சம்பாதிக்கலாம என்றும் கூறுகிறார்கள்.

 1. 3டி பிரிண்டரின் அபாயம்.

ஓர் இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் அவனே துப்பாக்கி தயாரித்து கொலை செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டான்.  இந்த சம்பவம் உலகையே உலுக்கியது.  இது போல இந்த கருவியின் மூலம் அபாயங்களும் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.

 1. கட்டுப்பாடு தடை தேவை..

இந்த 3டி பிரிண்டர்களை உபயோகப்படுத்துபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் இது பெரும் விபரீதத்தில் தான் கொண்டுபோய் விட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published.