சிறைச்சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆபாச நடனம் ஆடிய அவலம்

1453988930-52

பிஜப்பூர் மாவட்ட சிறைச்சாலையில், குடியரசு தினத்தையோட்டி சிறைச்சாலை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கலை நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், கைதிகள் யாரும் எதிர்பாராத வண்ணம், கவர்ச்சி ஆடையில் இளம்பெண் தோன்றி குத்தாட்டம் போட்டார். அப்போது கைதிகள் அனைவரும் அரவாரம் செய்தனர்.

இந்த நடனத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் சிலர், ரூபாய் தாள்களை அந்த கவர்ச்சி நடனப் பெண்மணி மீது வீசி ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சி, மாநில அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குனர் உள்ளிட்ட சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் சிறைச்சாலையில் ஆபாச நடன நிகழ்ச்சி நடந்துள்ளது என்பது சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சமூக ஆர்வலர்களும், சுதந்திர போராட்ட தியாகிகளும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.