பீகார் முதலமைச்சர் மீது ”ஷூவால்” தாக்கிய இளைஞன் கைது

201601290249496899_BiharChief-MinisterNitish_SECVPF
பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் வருகை தந்தார். இது அவரது  சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் முதல்வர் நிதீஷ் குமார் மீது  திடீரென, தனது ஷூவை கழட்டி ஆவேசமாக வீசினார். ஆனால், அந்த ஷூ அதிர்ஷ்டவசமாக அவர் மீது விழவில்லை. மாறாக, மேடைக்கு முன்பே   விழுந்தது. இதனால், முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.nitish-kumar_650x400_51453572487
இதற்குள் அந்த இளைஞரை போலீசார் வளைத்துப் பிடித்தனர். போலீஸ் விசாரணையில், அவர் பெயர் பி.கே.ராய் என்றும், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. மேலும் போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  முதல்வர் மீது ஒரு இளைஞன் செருப்பைக் கொண்டு தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.