எச்சரிக்கை! கிளம்பும் போது ரயிலில் இருந்து இறங்கிய பெண் சிக்கி இறந்தார் – CCTV வீடியோ

1

இளகிய மனம் கொண்டவர்களுக்கு இந்த வீடியோ ஏற்றதல்ல பார்க்காதீர்கள்……

கடந்த ஜனவரி 15-ம் தேதி மும்பையில் உள்ள போரிவில்லி ரெயில் நிலையத்திற்கு வந்த 55 வயதுள்ள பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர். பிற்பகல் 3.50 மணிக்கு நிலையத்திற்கு வந்த ரெயில் 4 மணிக்கு கிளம்பத் தொடங்கியது.

ரெயிலில் வர வேண்டிய அந்த பெண்ணின் குடும்பத்தாரில் சிலர் வராததால் ரெயில் புறப்பட்டுக் கொண்டிருக்கையில் அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர், மற்றும் ஒரு இளம்பெண் ஆகியோர் கீழே இறங்கினர். இளம் பெண்ணும், இளைஞரும் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிவிட்டனர். ஆனால் அந்த 55 வயது பெண் இறங்கும்போது தண்டவாளத்தில் சிக்கி ரெயில் சக்கரம் ஏறி பலியானார்.

55 வயது பெண் ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

யாரும் இந்த தவற்றை இனிமேலாவது செய்யாதீர்கள்….மனித உயிரை துச்சமாக மதிக்காதீர்கள் போனால் திரும்ப வராது.

Leave a Reply

Your email address will not be published.