ஆண் இரண்டு கல்யாணம் செய்யவில்லையென்றால் ஆயுள் தண்டனை

1347

தலைப்பை படித்ததும் வியந்து விட்டீர்களா மேலும் படியுங்கள் அந்த நாட்டுக்கு டிக்கட்டே எடுத்துவிடுவீர்கள். ஒரு ஆண் குறைந்தது இரு கல்யாணம் கண்டிப்பாக செய்ய வேண்டும். இல்லையேல் ஆண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்”​ என எரித்ரியா அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா கண்டத்தில் சூடானுக்கு அருகிலுள்ள நாடு எரித்ரியா. சுமார் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.

இதனால் அங்குத் திருமணம் புரியாமல் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குடும்ப வாழ்வு கிடைக்காமல் தகாத உறவுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

images (12)

இதனைக் கட்டுப்படுத்தவும் பெண்கள் அனைவரும் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழவும் தம் நாட்டில் வாழும் ஆண்கள் அனைவரும் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு திருமணம் புரியும் ஆண்களுக்கு வீடு மற்றும் செலவினங்களுக்கான உதவியையும் அரசே செய்யும் எனவும் அறிவித்துள்ளது.

இச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்குக் கடுமையான வேலையுடன் ஆயுள் தண்டனை சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வருமெனவும் தம் கணவரை மற்றொரு திருமணம் புரிய அனுமதிக்காத பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் அச்சட்டம் கூறுகிறது.

1998-2000 ஆண்டுகளில் பக்கத்து நாடான எதியோப்பியாவுடன் நடந்தப் போரில் எரித்ரியா இராணுவ வீரர்கள் சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததைத் தொடர்ந்து பெண்களுக்குத் திருமணம் புரிய ஆண்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எரித்ரிய அரசின் இப்புதிய சட்டம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.