சோற்றுக்கற்றாழையில் இவ்வளவு நற்குணங்களா?

download (12)

சோற்றக்கற்றாழையை அனைவரும் அறிந்திருப்போம், நீரோட்டம் நிறைந்த பகுதிகளில் தானாகவே வளரக்கூடிய தாவரம்.  நல்ல சதைப்பற்றுள்ள கீற்றுகளை கொண்டிருக்கும். அதன் உட்பகுதியில் சளிபோன்ற திரவத்தினைக் கொண்டிருக்கும்.  இந்த திரவத்தில் நிறைய நற்குணங்கள் உள்ளது. 

கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் சோற்றுப்பகுதியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் அள்ளி சாப்பிட்டுவந்தால் கண்பார்வையில் ஏற்பட்ட கலக்கங்கள் நீங்கிவிடும்.

சிலருக்கு சீதபேதி, இரத்தம் கலந்து போகும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம் சோற்றுக்கற்றாழையின் மேல் தோலை சீவி எடுத்துவிட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை மட்டும் கொண்டு, அதில் சீரகம், பனங்கற்கண்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் சரியாகிவிடும்.

சிறுநீர் கழிக்கும் போது, உப்பு தேங்கி, சிறுநீர் குழாயில் எரிச்சல் இருந்தால் கவலைப்படாமல் சோற்றுகற்றாழையை சாப்பிடுங்கள். சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்.

வயிற்றுப்பகுதியில் தேங்கும் வாயுக்கள், அடைத்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வுகள் ஆகியவை இந்த கற்றாழையை தொடர்ந்து சாப்பிடும்போது சரியாகிவிடும்.  வாயுக்கள் பிரிந்துவிடும்.

தான் அழகாக வேண்டும் என்று நினைப்பவர்கள், சோற்றுக்கற்றாழையை நம்பலாம்… சோற்றுக்கற்றாழையை தினந்தோறும் உண்ணும் போது அது உடலில் உஷ்ணத்தை குறைத்து உடலை மினு மினுப்பாக மாற்றுகின்றது.   உடல் மீதும் முகத்தின் மீதும் சோற்றுக்கற்றாழையை தடவினால் முகம் பார்லருக்கு சென்று வந்தமாதிரி பளிச்சிடும்.

ஷேவிங் செய்யும் போது கத்திப்பட்டு எரிச்சில் வந்தால் உடனே சோற்றுக்கற்றாழை எடுத்து தாடியில் பூசிவிட வேண்டும். இது எரிச்சலை நீக்குகின்றது.  மேலும் தாடியை மென்யாக்குகின்றது.

தலைமுடிக்கு வேரில் பட தினமும் கற்றாழையை தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள பொடுகு, பேன் நீங்கி முடிக்கால்கள் வலுவாகும்.

சோற்றுக்கற்றாழைச் சாறு இதயத்தை பாதுகாக்கின்றது. மாரடைப்பு வருவதை முழுவதும் தவிர்க்க இந்த சோற்றுக்கற்றாழை உதவுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.