இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!!

sleepy baby

எந்தெந்த காலங்களில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன எவ்வாறு செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  நமக்கெல்லாம் கற்றுத் தருவதற்கு பெற்றோருக்கு நேரமில்லை.  பாட்டி, தாத்தா உடனில்லை.  ஆகையால் தான் குறுகிய காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறையில் பல வேறுபாடுகளும் உடல் நலத்தில் குறைபாடுகளையும் காண்கிறாம்.  நீங்கள் இரவு நேரத்தில் செய்யும் சில வேலைகள்  மறுநாள் காலை உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் இலகுவாகவும் இருக்கச் செய்கிறது.                                                                                             இரவு தூங்குவதற்கு முன் அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்

  1. ஏழு மணி காபிக்கு நோ.

இரவு ஏழு மணிக்கு மேல், காபி குடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.  டாட்டா சொல்லுங்கள்.  இரவு நேர டீ உங்கள் ஜீரணத்தையும், உறக்கத்தையும் பாதிக்கும்.

  1. திட்டமிடுதல்.

நாளைய தினம் நீங்கள் என்ன காரியம் செய்ய வேண்டும் என்ன காரியம் செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

  1. குளிக்க வேண்டியது அவசியம்

இரவு தூங்கச் செல்லும்முன்பு குளித்தல் மிகுந்த பயனைத் தரக்கூடியது.  ஏனென்றால் இது உங்கள் உடலை சுத்தமாகச் செய்வதுமட்டுமின்றி நல்ல தூக்தம் வரச் செய்யும்.  இது உங்களை  மறுநாள் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதற்கு உதவும் பழக்கமாகும்.

  1. திருமணம் ஆனவர்கள்.

குழந்தைகளுக்கு என்ன வேண்டும், அவர்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன, அவர்களது தேவைகள் என்ன என்பதை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வெண்டும்.  அடுத்த நாள் காலை அவசரமாக அவசரமாக வேலை செய்வதை தவிர்க்க இது உதவி செய்யும்.

  1. துணிகளை இஸ்திரி செய்து வையுங்கள்.

காலையில் நீங்கள் அவசரம் அவசரமாக வேலைக்குச் செல்வீர்கள்.  நீங்கள் வீட்டில் உள்ளவர்களை துரிதப்படுத்தாமல், நாளைக்கு நீங்கள் அணியும் ஆடைகளை அயர்ன் செய்து வைத்துக் கொள்வது ஒரு நல்ல பழக்கம் ஆகும்.

  1. மின்னணு உபகரணங்கள்

விளக்குகள், டி.வி., கம்யூட்டர் போன்ற எலக்டிரிக் உபகரணங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னரே ஸ்விச்ஆப் செய்து விடுங்கள்.

  1. புத்தகம் படிக்கும் பழக்கம்.

இரவு தூங்குவதற்கு முன் புத்தகம் படிப்பது நல்ல பழக்கமாகும்.  இது, நல்ல தூக்கம், நினைவாற்றல் மற்றும் சுறுசுறுப்பான காலை பொழுதுக்கும் நல்ல வழிவகுக்கும்.

  1. அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு படுக்கைக்கு போகும் முன்னரேயே அறையை சுத்தம் செய்துவிட்டு படுக்க செல்ல வேண்டியது அவசியம்.  சுவாச பிரச்சினைகள் ஏற்படாது இருக்க உதவுகிறது. மற்றும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது.  பெரும்பாலும் எல்லோரும் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கமாகும்.

  1. விளக்கை அணைக்காமல் தூங்க வேண்டாம்.

சிலர் படுக்கும் அறையில் விளக்கை நிறுத்தாமலேயே தூங்கிவிடுவார்கள்.  இது உங்கள் உடலில் சுரக்கும் சுரப்பியின் அளவைக் குறைத்து விடுகிறது.  எனவே இரவு தூங்கும் பொழுது அந்த அறையில் இருக்கும் விளக்குகளை நிறுத்தி விடுங்கள்.

  1. நடைப்பயிற்சி

இரவு சாப்பாடு சாப்பிட்டபிறகு முடிந்தவரை குறைந்தது 5-10 நிமிடங்களாவது நடை பயிற்சி மேற் கொள்ளுங்கள்.  இது ஜீரணத்தை சீராக்குவதற்கு உதவி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.