தங்கச்சங்கிலிக்கு ஆசைபட்டு பாட்டியை கொலை செய்த சுற்றுலா இளசுகள்

Newss
இட்லி விற்கும் மூதாட்டியை நாலரை பவுன் தங்கச்சங்கிலிக்காக ஆசைப்பட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சுற்றுலாப்பயணிகள் கைது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசிப்பவர் பேபியம்மாள் (70). இவர் அந்த பகுதியில் இட்லி வியாபரம் செய்து வருகிறார். அந்த பகுதிகளில் இருக்கும் லாட்ஜுக்கு சென்று வியாபாரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி காலை இட்லி வியாபாரத்திற்கு சென்றவர் வீடு திரும்ப இல்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் வஜ்ரவேலு, அசோக் நகர் காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.  எனவே பேபியம்மாளை போலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றின் பூட்டிய அறைக்குள் பேபியம்மாளின் பிணம் கிடப்பது 23ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் அணிந்திருந்து 4 1/2 பவுன் தங்க நகையும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
1453958162-4246
விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்ட அறையில் தங்கியிருந்த சரவணன்(30), அவரது மனைவி சுகன்யா (24), சுகன்யாவின் உறவினர் பவித்ரா(22) ஆகிய மூவரும்தான் பேபியம்மாளை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தனிப்படை அமைத்து அவர்களை தேடிய போலிசார், நேற்று முன் தினம் திருப்பூரில் வைத்து அவர்களை கைது செய்தனர்.
நகைக்கு ஆசைப்பட்டு பேபியம்மாளின் கழுத்தை நெறித்து கொன்றதாகவும், கொள்ளையடித்த நகையை அசோக் நகரில் உள்ள ஒரு சேட்டுக் கடையில் அடகு வைத்ததாகவும் அவர்கள் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். சரவணன் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதும், சென்னையை சுற்றி பார்க்க வந்த அவர்கள், தங்கியிருந்த லாட்ஜில் பேபியம்மாளை கொலை செய்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.