ஊழலற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு இந்தியாவுக்கு….

Tamil_News_large_868086

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

ஊழலற்ற நாடுகள்: ஐரோப்பிய நாடான டென்மார்க் தொடர்ந்து ஊழலற்ற நாடாக முதலிடத்தை பெற்றுள்ளது. பின்லாந்த் 2-வது இடத்தையும், சுவீடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. ஊழல் நிறைந்த நாடுகள்: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும், ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்துள்ளன. இதில் இந்தியாவுக்கு 76-வது கிடைத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் ஊழல் சற்று குறைந்து 2014 ஆம் ஆண்டில் பெற்றதை போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவுக்கு ஊழல் பட்டியலில் 83-வது இடமும், வங்காளதேசம் 139-வது இடமும், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் 2014-ம் ஆண்டைவிட ஊழல் நிறைந்து ஊழல் தரவரிசை பட்டியலில் தங்களது இடங்களை சற்று உயர்த்திக் கொண்டுள்ளது.

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் பூடான் 27-வது இடத்தில் உள்ளது. இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில், வங்காளதேசம், கம்போடியா ஆகிய 2 நாடுகளும் ஊழலால் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகின. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஊழலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஊழலுக்கு எதிராக சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

2014 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஆண் ஆண்டில் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், 53 நாடுகள் பின்தங்கியுள்ளதாகவும், மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற, இறக்கம் எதுவும் இல்லை.

மேலும், ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்பார்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.