தூங்கி எழுந்த பின்பும் தூக்கம் கலையவில்லையா?

article-2306346-1932F8F4000005DC-61_468x418

நம்மவர்களில் சிலரைப் பார்த்திருப்பீர்கள் எப்போதும் தூங்கி வழியும் முகத்துடன், இருப்பர்.  எவ்வளவுதான் தூங்கினாலும் தூக்கம் அவரைவிட்டு விலகாது.  எப்போது மீண்டும் கண்ணயரலாம் என்று நினைத்துக்கொண்டே வேலை செய்வர்.  இப்படி பிரச்சினைகள் உள்ளவர்கள் நீங்கள் எனில் இதை மேலும் தொடர்ந்து படியுங்கள்.

உங்களுக்கு இருப்பது சோம்பேறித்தனம், அலுப்புத்தன்மை, எதிலும் கவனம் செலுத்தாத தனம் என்று உங்களை நீங்களே திட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் சீரியஸாக படியுங்கள்.  இவ்வாறு உள்ளவர்களுக்கு இரத்த சோகை வர வாய்ப்புள்ளது.

உடல் களைத்துப்போயிருக்கையில் இதற்கு ஓய்வு கொடுத்தால் உடல் இன்னும் கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்கும்.  தினமும் உடல் களைத்துப்போயிருக்கும் போது தினம் தினம் உடல் உழைக்கும் போது சோர்ந்து போய்விடும். நீரிழிவு நோய் வருவதற்கும் இது தான் அறிகுறி.  சரியான சத்துள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளப்படாமல் உடல் பாதித்துவிடும்.

இரவு நேர தூக்கம் என்பது குறைந்தது 8 மணி நேரம் இருக்க வேண்டும்.  அப்படி நேரம் குறைய நேரிட்டால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சேர்த்து உறங்கிவிடவேண்டும். இப்படி செய்தால் உடலில் களைப்பு தெரியாது. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தால் எப்படி நன்றாக வேலை புரியுமோ அது போல் தான் உடலும்.

குறட்டை வந்தால் சாதரணமாக நினைக்காதீர்கள், இது மாரடைப்புக்கு வழி செய்யும் அறிகுறி, இதை உணர்ந்து கொண்டு அதை தடுக்க சிகிச்சையை ஆரம்பியுங்கள்.  ஒல்லியானவர்களை விட குண்டானவர்கள் தான் இந்த தூக்க நோய்க்கு ஆளாகின்றார்கள்.

எண்ணெய்ப்பொருட்கள் அதிகம் உட்கொண்டால் கொழுப்பு அதிகமாகி உடல் சோர்வு அடைந்து விடுவார்கள்.  இவர்களாலும் தூக்கத்தில் இருந்து எளிதில் இயல்பு நிலைக்கு வர முடியாது. இதை தவிர்க்க காலையில் எழுந்ததும் பெட் காபி குடிக்கமால் உடனே பல்லையும் முகத்தையும் குளிர்ந்த நீர் விட்டு கழுவிவிட வேண்டும். இது தானாகவே புத்துணர்ச்சியை உடலுக்கு வித்திடும்.

பிறகு காலையில் டீ அல்லது எலுமிச்சை ஜூஸை அருந்தலாம்.  இது உடலில் குளுக்கோஸ் அதிகரிக்கச் செய்கின்றது… இதன் மூலம் தூக்க கலக்கத்தில் இருந்து வெளிப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published.