ஆரோக்கியமாக உண்ணுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்.

full veg

 

ஆரோக்கியமாக சாப்பிடுவது என்று வரும் பொழுது எல்லோரும் கடைபிடிக்கக் கூடிய பழமையான சில டிப்ஸ் உள்ளது.  ஆனால் புதிய வளர்ச்சிகளும் ஆராய்ச்சிக்கும் ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான புதிய விதிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்

  1. தோலோடு சேர்த்து கேரட்டை உண்ணுங்கள்.

கேரட்டில் இருந்து மிகுதியான ஊட்டச்சத்துக்களை பெற ஆசைப்பட்டால், அதனை சாப்பிடுவதற்கு முன், தோலை நீக்காமல் அவற்றை நன்றாக கழுவி விடுங்கள்.  கேரட்டின் தோலில் உள்ள சத்து எவ்வளவு தெரியுமா?  தோல் சீவப்பட்ட கேரட்டில் இருக்கும் அதே அளவிலான சத்து, அதன் தோலிலும் இருக்கிறது.

  1. கசக்கும் உணவுகளை சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் கசப்புத்தன்மையுள்ள உணவுகளை சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடிப்பதில்லை. கசப்பான ருசியைக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக உடல்நல பயன்களும், மிகுதியான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.  உதாரணமாக பாகற்காயை எடுத்துக் கொண்டால், அதில் ஊட்டச்சத்து அதிகம்.  பாகற்காயில் கசப்புத்தன்மை இருந்த போதிலும் கூட அவற்றில் கனிமங்களும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளன.

  1. கீரை,

கீரையை சேமித்து வைப்பதற்கு முன் வேரை வெட்ட வேண்டும்.  இதோ மற்றொரு சுவாரஸ்யமான தகவல்.  பின்னாள் பயன்படுத்துவதற்காக கீரையை சேமிக்க வேண்டுமென்றால், அதன் வேரை வெட்டி, தண்ணீரில் அலசி, காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.  அப்போது தான் அவை வீணாகாமல் அதிக ஊட்டச்சத்துடன் இருக்கும்.  நம் வீட்டை அடைந்த பின்னரும் கூட தாவரங்கள் உயிருடன் இருப்பதை பலரும் மறந்து விடுகிறோம்.  கீரையின் வேரை வெட்டி விடுவதன் மூலம் செடியின் மீதான தற்காப்பு உத்தியாக அது அமையும்.  இதனால் வலிமையான ஆன்டி-ஆக்ஸிடிடென்ட் பொருட்கள் இதில் நான்கு மடங்குகள் அதிகரிக்கும்.  இதனால் இதன் இலைகள் அதிக ஊட்டச்சத்துக்களுடன் விளங்குகின்றன.

  1. அடர்த்தி நிறத்திலான உணவுகளை கருதவும்.

வெளிர் நிறத்திலான பழங்கள் மற்றும் காய்கறிகளைவிட டார்க் நிறத்திலான பழங்கள் மற்றும் காய்கறிகளே ஆரோக்கியமானது.  டார்க் நிறத்திலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் அந்தோசையானின் என்ற ஊட்டச்சத்து அடங்கியுள்ளது.  மற்ற தாவர ஊட்டச்சத்துக்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஊட்டச்சத்து ஆரோக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published.