இந்திய தேசியக்கொடியை வீட்டில் பறக்கவிட்டதால் பாகிஸ்தானியர் கைது

1035006-kohliii-1453882497-342-640x480

இந்திய தேசிய கொடியை வீட்டில் ஏற்றியதாக பாகிஸ்தானை சேர்ந்த இளைஞரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் உமர் தராஸ் என்ற இளைஞர். இவர் வீட்டுக்கு மேல் இந்திய தேசிய கொடியை ஏற்றி உள்ளார். இந்திய தேசிய கொடி அவர் வீட்டில் பறப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டை பரிசோதனை செய்ததில் பெரிய அளவிலான விராட் கோலியின் படத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் விராட் கோலியின் தீவிர ரசிகர் என்றும்,அவரது ஆட்டத்தை பார்த்து இந்திய தேசிய கொடியை வீட்டில் பறக்க விட்டதாக  போலீசார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உமருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தன்னை ஒரு உளவாளியாக பார்க்க கூடாது என்றும், கோலியின் ரசிகராக பார்க்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் உமர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.