குடியரசு தினத்தன்று சுதந்திர தின வாழ்த்து சொன்ன மந்திரி

1453874506-5662

திரிபுராவில் பெண் அமைச்சர் குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் 67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று அவர் தர்மாநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பிறகு அவர் சிறப்பு உரையாற்றினார். அப்போது உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.இந்த மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலைமையில் மார்க்சிஸ்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நலத்துறை அமைச்சராக பிஜிதாநாத் என்ற பெண் உள்ளார். குடியரசு தின வாழ்த்துக்கு பதில் அமைச்சர் சுதந்திர தின வாழ்த்து கூறியதால் விழா அரங்கில் கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்கள் இருந்த பகுதியில் சிரிப்பு சத்தம் எழுந்தது. இதை பொருட்படுத்தமல் அமைச்சர் பிஜிதாநாத் உரையாற்றினார். அப்போது அவர் மீண்டும் 3 தடவையும் சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்டார். பெண் அமைச்சரின் இந்த பேச்சு திரிபுராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் பெண் அமைச்சர் பிஜிதாநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித்சின்கா கூறுகையில், கல்வியறிவு இல்லாத ஒருவரை அமைச்சராக்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு பற்றி அடிப்படை தெரியாதவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.