மவுனம் கலைத்தார் – அரசியலில் ஈடுபடுவாரா சகாயம்?

05-1415170351-madras-hc-appoints-a-committee-headed-by-sagayam-ias-to-probe-illegal-mining-600 (1)

தமிழகத்தில் உள்ள கலெக்டர்களில் நேர்மையான அதிகாரியாக சகாயம் அவர்கள் உள்ளார்.  தான் எங்கு பணிபுரிகின்றோமோ அங்கு எந்த விதத்திலும் தவறுகள் நடக்கக்கூடாது என்று நினைப்பவர். அவரை அரசியலில் ஈடுபடச்சொல்லி, சமூக வலைதளங்களில் அவருக்கு சப்போர்ட்டாக கணக்குகள் மற்றும் ஹேஸ்டேகை தொடங்கி மக்கள் ஆதரவு கொடுத்தவண்ணம் உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழகத்தின் பல பகுதிகளில், இளைஞர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், சகாயத்திற்கு ஆதரவான பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சகாயம் மவுனம் கலைத்துள்ளார்.

‘வாட்ஸ் ஆப்’ பில் சகாயம் விடுத்துள்ள வேண்டுகோள்: ‘அரசியலில் நேர்மையை கொண்டு வர விரும்புவோர், தங்கள் பணியை, சமூகத்தில் இருந்து துவக்க வேண்டும். தூய, நேர்மையான சமுதாயத்தை உருவாக்கினால், நேர்மையான சமூகம், நேர்மையான அரசியலை எளிதாக கொண்டு வரலாம்’ என, தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.