சர்க்கரை நோயா நாவல் பழம் சாப்பிடுங்கள்

தமிழகம் எங்கும் ஆற்றோரம் கரைகளிலும், வரப்புகளிலும், காடுகளிலும் காணப்படும் மரம் நாவல் மரம். இந்த நாவல் மரத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நாவல் பழம் பழுத்துக்கொண்டிருக்கும். சந்தைகளிலும், சில பெரிய பழக்கடைகளிலும் விவசாய நாவல் பழங்கள் வருடம் முழுக்க கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. கருநீல நிறமுள்ள இந்தப் பழங்கள் உவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
இந்த நாவல் பழத்தில் அதிகமாக கால்சியம் சத்து உள்ளது. அதிகமாக தின்னும் போது பற்கள் கூசும். அதை சாப்பிடுவதால் நம் உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாகிவிடும். எலும்புகள் மற்றும் பற்கள் பலமாகும்.
உயிர்சத்துக்கள் இந்த நாவல் பழத்தில் நிறைந்து காணப்படுகின்றது. பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
சர்க்கரை நோய் உடலில் வந்தால், அதை குறைப்பதற்கு இந்த நாவல் பழம் ஏற்றது. நாவல் பழக்கொட்டையை அரைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயை குறையும். நாவல் பழத்தின் கொட்டையை அரைத்து புண்ணுக்கு போட்டால் புண் ஆறிவிடும்.
சருமத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களை நீக்க, நாவல் பழத்தை நிறைய சாப்பிடலாம். பசியின்மை, கல்லீரல், மண்ணீரல், நோய்கள் ஏற்பட்டால் அவற்றை தடுக்கும். நாவல் பழத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது.
நாவல் பழத்தை சாப்பிடுவதால், இரத்தம் அதிகரிக்கும், இரத்தச் சோகை குணமாகும். அதிகமான உதிரப்போக்கு காலங்களில் பெண்கள், நாவற்பழத்தை சாப்பிடலாம்.
உடலில் ஏற்படும் அரிப்பு நோய்கள் குணமாகும். நாவல் பழத்தின் நன்மைகள் மிகவும் அதிகம். நாவல் கிடைக்கும் காலத்து தவறாமல் அதை சாப்பிடவும்.
Leave a Reply