பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக்கூடாத உணவுகள்

maxresdefault

நாம் வெகுதூரம் பயணம் செய்யும் போது, சில உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. பயணத்திற்கு முன்பு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நமக்கு நிறைய உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட உணவுகளை தவர்த்தலோ அல்லது அதற்கு மாற்று வழி செய்வதோ மிகுந்த நல்லது.

வெகுதூரம் பயணம் செய்யும் சற்று முன்பு அல்லது பேருந்தில் உட்காரும் முன்பு வெந்நீர் மற்றும் தேநீர் அருந்தக்கூடாது.  இவைகள் வேகமாக சிறுநீரகத்தை செயல்படுத்தி சிறுநீர் பெருக்கிவிடும்.  இதனால் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும்.  அசௌகரியமாக தோன்றும்.

சுரைக்காய் குழம்பு, சுரைக்காய் கூட்டு போன்றவைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால் ஒரு மணிநேரத்திற்கு எந்த பயணமும் செய்யாமல். சிறுநீர் முழுக்க வெளியேற்றிவிட்டுத்தான் பயணத்தை தொடர வேண்டும்.  ஏனெனில் சுரைக்காய் ஒரு சிறுநீர்ப் பெருக்கியாகும்.

வாழைத்தண்டு, பூசணிக்காய், பழையசாதம், கஞ்சிச்சாப்பாடு போன்ற அனைத்தும் சிறுநீரைப் பெறுக்கிவிடும்.  இவைகளை காலையில் பயணத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

வாழைப்பழத்தை பயணத்திற்கு முன்பு அல்லது பயணத்தின்போது சாப்பிடவேண்டாம்.  இது மலத்தை இலக்க வைத்து விடும்.  இதனால் உடனே மலம் கழிக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். வயிற்று வலி தந்துவிடும்.  இரவு உறங்குவதற்கு முன்பு மட்டுமே வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

மிளகு, சீரகம் கலந்த உணவுகளான இரசம் மற்றும் சாம்பார் வகைகள் உடனேயே உணவை செரிமானம் செய்து விடத் தூண்டும். இதனால் செரிமானம் உடனே ஆகி பிரயாணத்தின் போது மலம் கழிக்கவேண்டிய சூழ்நிலை அல்லது பசியை தூண்டிவிட்டுவிடும்.

வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு உடனேயே பிரயாணத்தை தொடங்கக்கூடாது. இது செரிமானப்பிரச்சினை அல்லது வாந்தியை உருவாக்கும்.  சாப்பிட்டப்பின் கண்டிப்பாக அரைமணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொண்டால். நம் பிரயாணம் இனிமையாக இருக்கும்.

காலையில் மிதமான சாப்பாடு அல்லது பிரட் மற்றும் இட்லி, தோசை போன்ற மென் உணவுகள் உண்டு விட்டு பயணத்தை தொடரலாம். அதிக காரம் மற்றும் இனிப்பு வகை உணவுகள், புதிய உணவுகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

வாந்தி  வரும் நினைப்பு இருந்தால் எலுமிச்சையை பிழிந்து வாயில் விட்டுக்கொண்டே வருவது மிக்க நல்லது.

வெந்நீரை நன்றாக ஆறவைத்து வாட்டர் பாட்டிலில் அடைத்தால் நல்லது.  அதை விடுத்து வெது வெதுப்பான நீர் சிக்கலை உண்டாக்கும்.  குழந்தைகளுக்கு பிரயாணத்தின் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டியது இவைகள். அவர்களுக்கும் இந்த உணவு முறைகள் பொருந்தும். பயணத்தின் அரை மணிநேரத்திற்கு முன்னரே அனைத்து உணவுகளையும் உண்டுவிட்டு இயற்கை உபாதைகளை உடலில் இருந்து நீக்கிவிட்டு பயணத்தை தொடரவும்.

உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! )

Leave a Reply

Your email address will not be published.