கேரளாவில் மயிரிழையில் உயிர் தப்பிய கால்பந்து வீரர் ரொனால்டினோ – வீடியோ காட்சி

images (9)
ரொனால்டினோ கேரளாவிற்கு விளம்பரத்தூதுவராக வந்த போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து ஒன்றில் மயிரிழையில் உயிர் தப்பினார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரோனால்டினோ கேரள மாநிலத்தில் நடைபெறும் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடருக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பங்கேற்பதற்காக நேற்று துபாயில் இருந்து நேற்று காலை கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர், அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் கோழிக்கோடு வந்தார்.
கோழிக்கோட்டில் இருந்த ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோழிக்கோட்டில் உள்ள  அரசுப்பள்ளியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரொனால்டினோ, பின்னர், அங்கிருந்து அரசு வாகனம் மூலம் அவர் தங்கியுள்ள ஓட்டல் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சென்ற வாழிகளில் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், அவர் சென்றுக் கொண்டு இருந்த சாலையின் பிரதான சந்திப்பை கடந்தபோது, ரொனால்டினோவின் காருக்கு முன்னால் திடீரென சிக்னல் கம்பம்  பயங்கர சப்தத்துடன் சரிந்து விழுந்தது. அப்பொழுது, காரின் டிரைவர், சுதாரிப்புடன் செயல்பட்டு அவசரமாக பிரேக் போட்டு காரை நிறுத்தி விட்டார். இதைப்பார்த்த காரில் இருந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அங்கு இருந்துகார் வேகமாக ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்று விட்டது.

 அப்பொழுது,  ரொனால்டினோ காரை சாமர்த்தியமாக நிறுத்திய காரை டிரைவரை வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.