நீங்க அடிக்கடி பதட்டப்படுவீங்களா?

nervours

 

தினந்தோறும் நம்முடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை பெறுகிறோம்.  சிறிய பதlட்டம் என்பது ஆண்கள், பெண்கள், மற்றும் இளைஞர்களுக்கும் பொதுவானதாகும்.  பதட்டத்தின் முதல் சிம்டம் கவலை மற்றும் பயம் ஆகும்.  கவலை அதிகமாகும் போது பதட்டம் மனிதனின் நல்வாழ்வு மற்றும் சாதாரண செயல்பாடுகளை துன்புறுத்துகிறது.  பதட்டமானது மனஅழுத்தம், மருந்துகளின் பக்க விளைவுகள் சட்ட விலக்கான மருந்துகளை பயன்படுத்துவது போன்ற விளைவுகளை தோற்றுவிக்கிறது.  நெஞ்சு படபடப்பு, வாய் காய்ந்து போதல், வியர்வை வருதல் போன்றவை நீங்கள் பதட்டமாக இருக்கும் பொழுது உணரலாம்.  ஒரு குமட்டல் உணர்வு வயிற்றில் உண்டாவதும் பதட்டத்தின் விளைவேயாகும்.  பதட்டத்தின் கால அளவு நீங்கள் பதட்டப்படும் நிகழ்வின் கால அளவைப் பொறுத்தது.  எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும் முன் பதட்டமாக இருப்பதாக உணர்ந்தால், அந்த வேலை முடிந்தவுடன் உங்கள் பதட்டம் தானாகவே போய்விடும்.  பதட்டத்தை ஏற்படுத்துவது போன்ற நிகழ்வுகள் மறுபடியும் மறுபடியும் வரும் பொழுது, ஒரு இன்பமயமான வாழ்க்கை வாழ்வதற்கு, நீங்கள் சரியான சிகிச்சை எடுததுக் கொள்ள வேண்டியது அவசியம்.  நீங்கள் லேசான பதற்றத்தை உணரும் பொழுது பின்வரும் இயற்கை சிகிச்சை முறைகளை பின்பற்றலாம்.

பதட்டத்திற்கான சில இயற்கை சிகிச்சை முறைகள்.

  1. மூச்சு பயிற்சியை செய்யவும்.

மூச்சுப் பயிற்சி பதட்டத்தை போக்க ஒரு சிறந்த வழி ஆகும்.  ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி உடலை ஆசுவாசப்படுத்துகிறது.  மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.  ஒரு சௌகர்யமான நாற்காலியில் உட்கார்ந்து மூச்சை உள்ளே இழுக்கவும்.  பின் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வரை விரல்விட்டு எண்ணவும்.  பிறகு மூச்சை வெளியே விடும் போதும் நான்கு வரை எண்ணவும்.  மீண்டும் மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.  சுவாசிக்கும் போது காற்றானது நுரையீரல் முழுவதற்கும் சென்று, பின் உடலை விட்டு வெளியேறுவதால் அக்கம் பக்கத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.  மூச்சுப் பயிற்சி உங்கள் மனஅமைதிக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

  1. சீமைசாந்தி டீ அருந்துங்கள்

சீமைச்சாந்தி டீ சாப்பிடுவது பதற்றத்தை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  சீமைச் சாமந்தியில் எபிஜெனின், பைசொபொலல் மற்றும் லயொடோலின் ஆகிய உடலுக்கு ரிலாக்ஸ் அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.  தினமும் சீமைச்சாமந்தி டீ சாப்பிடுபவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைந்துள்ளது.

  1. லாவெண்டர் மணத்தை உள்ளிழுக்கவும்.

பூக்களின் நறுமண வாசம் மனத்திற்கு சுகத்தைத் தருகின்றது.  லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து கொள்ளலாம்.  சில துளி லாவெண்டர் எண்ணெய்யை தலையணை உறையில் தடவிக் கொண்டு படுத்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்.

  1. யோகா

மன அழுத்தம், மன அமைதி மற்றும் பதற்றம் குறைப்பதற்கு யோகா பயிற்சி உதவுகிறது.  சில ஈஸியான யோகா பயிற்சிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு நன்மை பயப்பதுடன் பதட்டத்திற்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.

  1. உங்கள் குளியல்நீரில் எப்சம் உப்பு சேர்க்கவும்.

எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் சல்பேட் மன அழுத்தம் மற்றும் இரத்தத்தை குறைக்க உதவுகிறது.  எப்சம் உப்பு குளியல் மனநிலையை கட்டுப்படுத்தவும் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

குறிப்பு. உங்கள் தினரி வாழ்வில் தலையிடும் அளவிற்கு பதற்றத்தின் அளவு அதிகமாக இருந்தால் ஒரு மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.