சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக கட்டெறும்புகள்

download (10)

குஜராத் சிறுமியின் காதில் இருந்து திடுதிப்பென்று கட்டெறும்புகள் வந்த வண்ணம் உள்ளது. காதுக்குள் கட்டெறும்பு எப்படி உற்பத்தியாகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல்  மருத்துவர்கள் திணறி வருகின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத், தீசா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் டர்ஜி. இவரது மகள் ஸ்ரேயா டர்ஜி(12)காதில் அரிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.

இதனால்  மகளை அழைத்து காதை பார்த்த சஞ்சய், காதில் எறும்புகள் இருப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ள ENT மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து சென்றனர். சிறுமியின்  காதை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காதில் இருந்து சுமார் 10 கட்டெறும்புகளை வெளியே எடுத்தனர்.

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மீண்டும் காதில் அரிப்பு ஏற்படுவதாக சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனைதொடர்ந்து பெற்றோர் அவரை இன்என்டி சிறப்பு மருத்துவரிடம் அழைத்து  சென்றனர். சிறுமியின் காதில் இருந்து மீண்டும் அதேபோல் கட்டெறும்புகள் வெளியே எடுக்கப்பட்டது. லெப்ராஸ்கோபி கேமரா மூலமாக காது சோதனை செய்யப்பட்டது. எனினும் ஸ்ரேயா காதில்  எறும்புகள் எப்படி உற்பத்தியாகிறது என்பதை கண்டறிய முடியவில்லை.

இது தொடர்பாக மருத்துவர் ஜவஹர் தல்சானியா கூறியதாவது, ‘‘மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்த்தது கிடையாது. தொடர்ந்து காதில் இருந்து எறும்புகள் வெளியேறினால்,  சிறுமியை வீடியோ கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.  இது போல் ஒரு பெண்ணுக்கு வடமாநிலம் ஒன்றில் எருக்கம்பூ வாக பூத்து பூத்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.