இந்தியாவின் 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது

1453781701-5113
7வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை, மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் ரோசைய்யா தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு சென்ற அவர், அங்கு போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். அப்பொழுது, முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆளுநரை முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்.
முப்படையை தொடர்ந்து போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்–பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண, சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதற்கு பின்னர், தமிழ்நாட்டில் வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அப்பொழுது, வேளாண்துறை சிறப்பு விருது மதுரையைச் சேர்ந்த பெண் பிரசன்னாவிற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published.