சிக்கனுக்கு பதில் கோழியின் கழிவை பரிமாறிய KFC

201601251432171842_Horrifying-discovery-in-her-KFC-meal_SECVPF

கே.எப்.சி. அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கம்.தற்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு பொரித்த கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை,பரிமாறி கடும் சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்கின்ஸ் என்ற இளம்பெண், வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கே.எப்.சி. கிளைக்கு கடந்த 13ம் தேதி சாப்பிடச் சென்றுள்ளார்.ஜிங்கர் டவர் மீல் எனப்படும் கோழி இறைச்சியையும் பர்கரையும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கான உணவுத் தட்டு வந்தது. ஆனால் அதில் கோழிக்கறிக்குப் பதிலாக தூக்கி குப்பையில் வீசப்படும்,கோழியின் மூளை, இரைப்பை போன்ற ; கழிவுகள்தான் இருந்துள்ளது.அதுவும் வேகாத நிலையில்.

இது தொடர்பாக ஹாரிஸ் அளித்த பேட்டியில், “அது பிங்க் நிறத்தில் பார்க்கவே மிகக் அறுவெறுப்பாக இருந்தது. நான் அதைத் தொடக்கூட விரும்பவில்லை. பார்ப்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல் இருந்தது. எனது பர்கரில் கூட தலைமுடி இருந்தது. பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிடவே மாட்டேன்.” என்று கூறியுள்ளார். இந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி நடந்த இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம் இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளது.

நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் விடுவதால் சில எதிர்பாராத தருணங்களில் இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் நினைவு படுத்தியுள்ளோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.