நரம்புத்தளர்ச்சியா நடுங்காம அமுக்கிராவை எடுங்க

seemaiamukkara

நரம்புத்தளர்ச்சி என்றால் என்ன?  நரம்புத்தளர்ச்சி என்பது இறுகிப்போன நரம்புகள் அதிக இரத்த அழுத்தத்தாலும், கோபம், குடி, சுய இன்பங்கள் போன்ற தீய செயல்களால் தளர்வடைந்து போய் இருக்கும். எடை அதிகமான பொருட்களை தூக்கும் போதோ அல்லது கோபம், பயம், குளிர் போன்ற நேரங்களில் உடல் நடுங்க ஆரம்பிக்கும். கை, கால் கூட நடுங்கும்.

இந்த நரம்புத்தளர்ச்சி வந்தால் உண்மையில் போக்குவது கடினம் தான்.  இது போன மாதிரி தெரியும் ஆனால் சரியாகாது.  நரம்புத்தளர்ச்சியின் உச்ச கட்டம் என்ன தெரியுமா? பேனாவால் எழுதக்கூட முடியாது, கைகள் தானாகவெ நடுங்கும், களைப்பாக இருக்கும், சோம்பேறித்தனம் மற்றும் உடல் சோர்வு நிறைந்து காணப்படும், தூக்கம் வராமல் ஒரு விதமான பயம் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

சித்த மருத்துவம் இந்த பிரச்சினையை தீர்க்க உதவுகின்றது.  கீழ்க்கண்ட மூலிகைகளை எடுத்துக்கொண்டு செய்முறையில் சொன்னவாறு மருந்தை தயாரிக்கவும்.

தேவையானவை :
அமுக்கிராக் கிழங்கு – 500 கிராம்.
மிளகு – 25 கிராம்.
சுக்கு – 25 கிராம்.
அதிமதுரம் – 25 கிராம்.
ஏல அரிசி – 25 கிராம்.
சாதிக்காய் – 25 கிராம்.
தேன் – 1 கிலோ.
பால் – 1/2 லிட்டர்.

செய்முறை :

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.
நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள் சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும். எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி (மிதமான தணலில்) மேற்கண்ட எல்லாப் பொடி களையும் சிறிது சிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை :

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும். இந்த மருந்தை தொடர்ந்து ஒரு மண்டலம்(48 நாட்கள்) உண்ணவேண்டும்.

பத்தியம் :

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவேத் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.