காளான் தின்றால் மார்பகப்புற்று நோயை விரட்டலாம்

download (9)

மகளிர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இந்த மார்பகப்புற்று நோய் தான்.  பத்தில் ஒரு பெண்ணுக்கு 35 வயதுக்குள் மார்பக புற்றுநோய் வந்துவிடுகின்றது.  இந்த மார்பகப்புற்று நோயை காளான்கள் தடுக்கின்றது என்ற உண்மையை கண்டறிந்துள்ளனர்.

காளான்கள் இயற்கையாக மழைபெய்யும் காலத்து முளைக்கக்கூடியது.  இந்தியாவில் எட்டு வகைக்கும் அதிகமான காளான்கள் விளையும். சிப்பிக்காளான் என்ற சாப்பாட்டு வகை காளானை பண்ணையில் பயிரிடுகின்றார்கள்.  காளான்களை கொண்டு நிறைய  சுவையான பதார்த்தங்களை படைக்கின்றனர்.

காளான் இயற்கையாக விளைந்தாலும் அல்லது பண்ணையில் விளைவிக்கப்பட்டாலும் அதன் நற்குணங்கள் மாறுவதில்லை.  இரண்டிலும் ஒரே மாதிரியான நற்குணங்களே உள்ளன. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.  இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்களை காளான் வெளியேற்றிவிடுகின்றது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது காளானால் குறைக்கப்படுகின்றது. இதயத்தின் செயல்பாட்டை மாற்றியமைக்கின்றது.  இதயத்தை பாதுகாக்கின்றது. மாரடைப்பு ஏற்படாமல் இவைகள் இதயத்தை பாதுகாத்துக்கொள்கின்றது.

காளான் தாமிரச்சத்துக்கள் நிறைந்தவை.  காளானை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம் நீங்கும்.  இனிமேல் ஏற்படாமலும் இருக்கும்.  காளானில் உள்ள புரோட்டீன் அதிகம்.  காளானில் அதிகமாக புரோட்டீன்கள் இருப்பதால் குழைந்தைகளுக்கு மாலை உணவாக கொடுத்தால் அவர்களின் எலும்பு மற்றும் தசைகள் மிகுவாக வலுவடையும்.

சிக்கன் குன்யா, மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் தேறிவிடுவார்கள்.  காளான் வயதானவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களை வலிமையாக்குகின்றது.

குறிப்பு :

தாய்ப்பால் தரும் தாய்மார்கள், காளாளை சாப்பிட வேண்டாம், இது தாய்ப்பாலை வற்ற வைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.