தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள்

paai_993507262

இப்போது எல்லாருடைய வீட்டிலும் மெத்தைகள் உள்ளது.   அதிகமாக உழைத்துவிட்டு வந்து நிம்மதியாக பாயில் படுத்த காலமெல்லாம் ஓடிவிட்டது.  இப்போது மெத்தையில் உருண்டு உருண்டு தூக்கம் வராமல் தவிக்கும் நாட்கள் ஆகிவிட்டது.  இந்த பாயில் அல்லது கட்டாந்தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள் எவ்வளவு என்று தெரியுமா?

மெத்தையில் படுப்பதால் முதுகுத்தண்டு வளைந்து நெளிந்து தான் இருக்கும்.  இதனால் முதுகுவலி மற்றும் முதுகு பலமில்லாமல் போய் விடும். ஆனால் பாயில் படுப்பதால் முதுகுத்தண்டு நீண்டு இருக்கும்.  இதனால் வலி எதாவது ஏற்பட்டிருந்தால் கூட சரியாகிவிடும்.

காலையில் புத்துணர்ச்சியாக இருக்கலாம்.  மெத்தையில் படுத்திருந்தால்.  தூக்க கலக்கத்துடன் தான் காணப்படுவர்.  ஆனால் பாயில் படுக்கும் போது தூக்க கலக்கம் நீங்கி நல்ல புத்துணர்வுடன் காணப்படுவீர்கள்.

கழுத்துவலி மற்றும் தலைவலி, தலைச்சுற்றல் உள்ளவர்கள் மெத்தையை விடுத்து பாயில் படுத்தால் அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.   கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆக பாயில் படுத்தல் நலம்.

புவியீர்ப்பு விசை நம் உடலில் சீராக பரவி, நம் உடலில் உள்ள அனைத்து நாடிகளிலும் சக்திகளை கொடுக்கின்றது.  இதனால் நமக்கு உடலில் இயக்க சக்திகள் கிடைத்துவிடுகின்றது.  தினமும் மெத்தையை விடுத்து பாயில் உறங்குவதால் எவ்வளவு நன்மைகள் ஆனால் நாம் சொகுசுக்கு ஆசைப்பட்டு இப்படி மெத்தையில் படுத்து உறங்குகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.