நாற்பது வயதை எட்டி விட்டீர்களா?

_74427529_122467628

உழைத்து உழைத்து ஓரளவுக்கு தன் தேவைகளை எட்டிப்பிடித்து தற்போது அப்பாடா என்று அமைதியாகி அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நாற்பது வயதை தொட்டிருப்பீர்கள்.  இந்த நாற்பது வயதை தொட்டதும் கூடவே உடல் சார்ந்த பிரச்சினைகளும் வந்துவிடும்.

உடல் இதற்குமுன் கல்லைக் கூட செரித்துவிடும். ஆனால் இனிமேல் வாழைப்பழத்தைக் கூட செரிக்கவிடாது. காரணம் உடலில் சுரக்கும் திரவங்கள் குறைய ஆரம்பித்துவிடும். இனிமேல் உடலுக்கு சத்துக்கள் அதிகமாக தேவைப்படுகின்றது. அதிகமாக பச்சைக்காய்கறிகளை உடலுக்கு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோய் என்பது இந்த நாற்பதுகளில் மெதுவாக எட்டிப்பார்க்கும். விட்டோமானால் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். இதற்காக காலை உணவில் சிறிது மாற்றம் செய்து விடுங்கள். காலையில் நன்றாக குழைய விட்ட கஞ்சி சாப்பாட்டை சாப்பிடுங்கள். ஓட்ஸ் போன்ற உடலுக்கு உரமூட்டும் உணவை உட்கொள்ளுங்கள்.

அதேப்போல் சிறுநீரகப்பிரச்சினைகளும் வரும். அதனால் உப்பு, காரம்  போன்றவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிட வேண்டும்.

இரத்த ஓட்டம் நன்றாக இருக்க சிகப்பு காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.  பீட்ரூட், ஆப்பிள் பழங்களை கிடைக்கும் போதெல்லாம் சற்று அதிகமாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.

பெர்ரி வகைப்பழங்களை அதிகமாக சாப்பிடலாம்.  இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும்.

முருங்கைக் கீரை, மற்றும் ஏனைய பச்சைக் கீரைகளை அதிகமாக உடலில் சேர்க்கலாம். தினந்தோறும் உடற்பயிற்சிகள் மற்றும் யோகப்பயிற்சிகள் நன்மை அளிப்பவை ஆகும்.

கடலை வகைகள் அதிகம் உட்கொள்ளுதல் நல்லது. வேர்க்கடலையை தினமும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் போதுமான சத்துக்கள் உடலுக்கு கிடைத்துவிடுகின்றன.

நாற்பது வயதில் நாம் அடுத்தவர்களை  பாதுகாப்பதற்கான தெம்பை பெற்றிருக்க வேண்டும். அதை விடுத்து நம்மை பார்க்க அடுத்தவர்களை ஆளாக்கி விடாதீர்கள்.  நல்ல ஆரோக்கியமான உடலைப் பாதுகாத்து நன்மை அடையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.